ஹாக்கி இந்தியா லீக்: ராஞ்சி ரேஸ் அணி சாம்பியன்

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
ஹாக்கி இந்தியா லீக்: ராஞ்சி ரேஸ் அணி சாம்பியன்

ஹாக்கி இந்தியா லீக் போட்டியில் ராஞ்சி ரேஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. பெனால்டி ஷூட் அவுட் வரை நீடித்த இறுதியாட்டத்தில் ராஞ்சி அணி மூன்றுக்கு இரண்டு என்ற கோல்கள் கணக்கில் பஞ்சாப் வாரியர்ஸ் அணியை தோற்கடித்தது.

 

டெல்லியில் நடைபெற்ற இறுதியாட்டத்தில் ராஞ்சி ரேஸ் அணி முதல் கோலை அடித்தது. அந்த அணியில் விளையாடும் ஆஸ்திரேலிய நாட்டு வீரர் கிரோன் கோவர்ஸ் முதல் கோல் அடித்தார். இதைதொடர்ந்து ராஞ்சி அணிக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பில் அந்த அணியின் ஸ்டான்லி பதில் கோல் அடித்தார். இதையடுத்து பஞ்சாப் அணிக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பில் அந்த அணியில் விளையாடும் ஆஸ்திரேலிய வீரர் கிறிஸ் கிரியெல்லோ தங்கள் அணிக்கான இரண்டாவது கோலை அடித்தார். சற்று நேரத்திலேயே ராஞ்சி அணியில் விளையாடும் இங்கிலாந்து நாட்டு வீரர் பார்ரி மிடில்டன் கோல் அடித்து சமன் செய்தார்.
ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா இரண்டு கோல்கள் அடித்திருந்தால், வெற்றி தோல்வியை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் மூன்றுக்கு இரண்டு என்ற கோல்கள் கணக்கில் ராஞ்சி அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
சாம்பியன் பட்டம் வென்ற ராஞ்சி அணிக்கு மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி வெற்றிக்கோப்பையை வழங்கினார்.

மூலக்கதை