ஐ.எம்.எப்., தலைமை பொருளாதார ஆலோசகரானார் கீதா கோபிநாத்

தினமலர்  தினமலர்
ஐ.எம்.எப்., தலைமை பொருளாதார ஆலோசகரானார் கீதா கோபிநாத்

வாஷிங்டன்:இந்தியாவைச் சேர்ந்த, கீதா கோபிநாத், 47, ஐ.எம்.எப்., எனப்படும் பன்னாட்டு நிதியத்தின், தலைமை பொருளாதார ஆலோசகராக பொறுப்பேற்றார். இப்பதவியை அலங்கரிக்கும் முதல் பெண் என்ற சிறப்பையும் இவர் பெற்றுள்ளார்.

கர்நாடக மாநிலம், மைசூரில் பிறந்த கீதா கோபிநாத், அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலையில், சர்வதேச ஆய்வு மற்றும் பொருளாதாரத் துறை பேராசிரியராக பணியாற்றியவர்.பன்னாட்டு நிதியத்தின் ஆய்வுத் துறை பொருளாதார ஆலோசகர் மற்றும் இயக்குனராக இருந்த, மாரிஸ் ஆப்ஸ்ட்பெல்ட், 2018, டிச., 31ல் ஓய்வு பெற்றார்.

இதையடுத்து, இப்பொறுப்பை கீதா கோபிநாத் ஏற்றுள்ளார்.அவர், உலகமயமாக்கலின் தாக்கம், சர்வதேச வர்த்தகம் மற்றும் நிதிச் சேவைகளில், டாலர் போன்ற கரன்சிகளின் ஆதிக்கம் ஆகியவை தொடர்பான ஆய்வில் கவனம் செலுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அனைத்து நாடுகளுமே, அன்னிய நேரடி முதலீடுகளை வரவேற்கின்றன. ஆனால், இத்தகைய முதலீடுகள், பெரும்பாலும் தொழில்நுட்ப நிறுவனங்களில் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால், உள்நாட்டு பாதுகாப்புக்கும், சர்வதேச சொத்துரிமைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது கவலை அளிக்கிறது என, கீதா கோபிநாத் கூறியுள்ளார்.

மூலக்கதை