மாநில ஏற்றுமதியை மேம்படுத்த நாளை உயர்மட்ட குழு கூடுகிறது

தினமலர்  தினமலர்
மாநில ஏற்றுமதியை மேம்படுத்த நாளை உயர்மட்ட குழு கூடுகிறது

புதுடில்லி:மாநிலங்களின் ஏற்றுமதியை மேம்படுத்துவது தொடர்பாக, மத்திய – மாநில அரசுகளின் வர்த்தக அமைச்சர்கள் பங்கேற்கும், வர்த்தக வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக் குழுவின் ஆலோசனை கூட்டம், நாளை டில்லியில் நடைபெற உள்ளது.
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர், சுரேஷ் பிரபு தலைமையில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில், மாநில அரசுகளின் வர்த்தக அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.அனைத்து மாநிலங்களும், ஏற்றுமதியை மேம்படுத்த, தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டும் என, மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.
மேலும், அனைத்து மாநிலங்களும் ஏற்றுமதி கொள்கைகளை உருவாக்கி, ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையர்களை நியமிக்க வேண்டும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதியை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்க, 2015ல், வர்த்தக வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக் குழு அமைக்கப்பட்டது.
நாளை நடைபெற உள்ள இக்குழுவின், நான்காவது ஆலோசனை கூட்டத்தில், மாநில அரசுகள், ஏற்றுமதியை மேம்படுத்துவது தொடர்பாக எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என, மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மூலக்கதை