மின்னணு பரிவர்த்தனை குழு தலைவராக நிலேகனி தேர்வு

தினமலர்  தினமலர்
மின்னணு பரிவர்த்தனை குழு தலைவராக நிலேகனி தேர்வு

மும்பை:மின்னணு பணப் பரிவர்த்தனைகளை மேம்படுத்துவது, பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து, பரிந்துரை வழங்க, ரிசர்வ் வங்கி, உயர்மட்டக் குழுவை அமைத்துள்ளது.
இக்குழுவின் தலைவராக, தனி நபர் அடையாள ஆணையத்தின் முன்னாள் தலைவர், நந்தன் நிலேகனி நியமிக்கப்பட்டுள்ளார்.உயர்மட்டக் குழு உறுப்பினர்களாக, ரிசர்வ் வங்கி முன்னாள் துணை கவர்னர், எச்.ஆர்.கான், ஆமதாபாத், ஐ.ஐ.எம்.,மின், தலைமை கண்டுபிடிப்பு மற்றும் ஆய்வுப் பிரிவின் தலைமை அதிகாரி, சஞ்சய் ஜெயின், விஜயா வங்கி முன்னாள் தலைமை செயல் அதிகாரி, கிஷோர் சன்சி, தகவல் தொழில்நுட்பத் துறை முன்னாள் செயலர், அருண் சர்மா ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இக்குழு, மின்னணு பணப் பரிவர்த்தனையில், பாதுகாப்பை பலப்படுத்தி, பரவலான பயன்பாட்டிற்கு தேவையான தீர்வையும், பரிந்துரையையும் ரிசர்வ் வங்கிக்கு வழங்கும்.உயர்மட்டக் குழு, முதல் கூட்டம் துவங்கியதில் இருந்து, 90 நாட்களில் அறிக்கை அளிக்கும் என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மூலக்கதை