நவீன பண்டமாற்று யோசனை: நிதின் கட்கரி

தினமலர்  தினமலர்
நவீன பண்டமாற்று யோசனை: நிதின் கட்கரி

புதுடில்லி:‘‘ஈரானில் உள்ள சாபர் துறைமுகப் பணிகள் முழுவதையும், இந்தியா விரைவில் மேற்கொள்ளும்,’’ என, மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர், நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.அவரை, இந்தியா வந்துள்ள, ஈரான் வெளியுறவு அமைச்சர், ஜாவத் ஸரிப், நேற்று டில்லியில் சந்தித்தார்.

இதைத் தொடர்ந்து, நிதின் கட்கரி, செய்தியாளர்களிடம் பேசியதாவது:ஈரானின், சிஸ்தான் – பலுாசிஸ்தான் மாகாணத்தில் உள்ள, சாபர் துறைமுகம், நமக்கு மிகவும் முக்கியமானது. இந்தியா, இத்துறைமுகப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.தீர்வுஇதில், ஒருசில பிரச்னைகளுக்கு, விரைவில் தீர்வு காண்பது தொடர்பாக, ஈரான் அமைச்சருடன் நடத்திய பேச்சு பயனுள்ளதாக இருந்தது.
வெகு விரைவில், சாபர் துறைமுகம் முழு அளவில் செயல்பாட்டிற்கு வரும்.இந்தியா, இத்துறைமுகத்தில், இயந்திரங்களை நிறுவ, 560 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. கடந்த ஆண்டு, டிசம்பரில், சாபர் துறைமுகத்தில், ஒரு பகுதியின் செயல்பாட்டை, இந்தியா துவக்கியது. பிரேசில் நாட்டில் இருந்து, முதல் சரக்கு போக்குவரத்து மேற்கொள்ளப்பட்டது.சாபர் துறைமுக பகுதியில், ஷாஹித் பெஹஸ்தி துறைமுகத்தின் ஒரு பிரிவின் பணிகளையும், நாம் கையாள ஒப்பந்தம் செய்துஉள்ளோம்.மேலும், சாபர் துறைமுகப் பகுதியில், சிறப்பு பொருளாதார மண்டலத்திற்காக, இந்தியா உருவாக்கிய, ஐ.பி.ஜி.சி.எப்.இசட்., நிறுவனத்தின் வர்த்தகச் செயல்பாடுகளும் துவங்கியுள்ளன.
இந்நிறுவனம், சைப்ரஸ் கப்பல் மூலம் முதன் முறையாக கொண்டு வரப்பட்ட, 73 ஆயிரம் டன் மக்காச்சோளத்தை இறக்குமதி செய்தது.விரைவில், சாபர் துறைமுகத்தின் அனைத்து பணிகளும் முழுமையாக செயல்பாட்டிற்கு வரும்.ரயில் இன்ஜின்ஈரான் வெளியுறவு அமைச்சர், பல்வேறு யோசனைகளை தெரிவித்தார்.அவற்றில், பண்டமாற்று முறையும் ஒன்று. ஈரானுக்கு, ரயில்வே பணிகளுக்கு அதிக அளவில் உருக்கும், ரயில் இன்ஜின்களும் தேவைப்படுகின்றன.அதனால், இந்தியா, ஈரானுக்கு ரயில் தண்டவாளங்களை சப்ளை செய்யும். ஈரான், நமக்கு உரம் வழங்கும்.சாபர் துறைமுகப் பணிகள் தொடர்பான பணப் பரிவர்த்தனைகளுக்கு, ஈரான் வங்கி, மும்பையில் கிளை துவங்க, ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. அடுத்த மூன்று மாதங்களில், ஈரான் வங்கி செயல்படத் துவங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
ஆப்கனுக்கு சரக்கு போக்குவரத்துஇந்தியா, 2003ல், ஈரானின் சாபர் துறைமுக மேம்பாட்டு பணிகள் தொடர்பாக பேச்சு நடத்தியது. எனினும், இத்திட்டத்தில், 2014 பிற்பாதியில் தான், இந்தியா அதிக அக்கறை காட்டியது. இதையடுத்து, 2015, மே மாதம், சாபர் துறைமுக மேம்பாடு தொடர்பாக, இரு நாடுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது.
இதையடுத்து, பிரதமர் மோடி, 2016, மே, 23ல் ஈரான் சென்ற போது, சாபர் துறைமுகத்தை மேம்படுத்தி, 10 ஆண்டுகள் நிர்வகிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.இதன்படி, சாபர் துறைமுகத்தின் முதற்கட்ட பிரிவின் செயல்பாடு, 2017, டிசம்பரில் துவங்கியது. இதன் மூலம் இந்தியா, பாகிஸ்தான் கடல் பகுதிக்கு செல்லாமல், சாபர் துறைமுகம் வழியாக, ஆப்கனுக்கு சரக்குகளை அனுப்புவது சாத்தியமாகிஉள்ளது.

மூலக்கதை