ஆசிய கோப்பை கால்பந்து கிர்க்ஜிஸ்தானை வென்றது சீனா

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆசிய கோப்பை கால்பந்து கிர்க்ஜிஸ்தானை வென்றது சீனா

அபுதாபி: ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில், சீன அணி 2-1 என்ற கோல் கணக்கில் கிர்க்ஜிஸ்தானை போராடி வென்றது. ஆசிய கோப்பை கால்பந்து போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.

இதில், மொத்தம் 24 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் ஆட்டங்கள் நடந்து வருகின்றன.

நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சீனா, கிர்க்ஜிஸ்தான் அணிகள் பலப்பரிட்சை நடத்தின. ஆட்டம் தொடங்கியதும் கிர்க்ஜிஸ்தான் அணி ஆதிக்கம் செலுத்தியது.

அந்த அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், முதல் பாதியில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இந்நிலையில், கிர்க்ஜிஸ்தான் அணியின் கோல்கீப்பர் பல்வே செய்த தவறு சேம்சைடு கோலாக மாறியது.

இதனால், ஆட்டம் 1-1 என சமநிலை பெற்றது. இதனால் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியது.

ஆட்டம் முடிவடையும் தருவாயில், சீன வீரர் யு டபோ கோல் அடித்து அசத்தினார்.

இந்நிலையில், சீன அணி 2-1 என்ற கோல் கணக்கில் கிர்க்ஜிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றது.

தரவரிசையில் 91வது இடத்தில் இருக்கும் கிர்க்ஜிஸ்தான்  முதன்முறையாக பங்கேற்ற பெரிய போட்டி இதுவாகும்.

மற்றொரு லீக் ஆட்டத்தில் தென்கொரியா அணி 1-0 என்ற கோல் கணக்கில் பிலிப்பைன்ஸ் அணியை வென்றது.   இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் ஈராக்-வியட்நாம் அணிகளும், சவுதி அரேபியா-வடகொரியா அணிகளும் பலப்பரிட்சை நடத்துகின்றன.

.

மூலக்கதை