இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 70.04

தினமலர்  தினமலர்
இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 70.04

மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவுடன் காணப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக இறக்குமதியாளர்களிடையே அமெரிக்க டாலரின் தேவை அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு காணப்படுகிறது.

இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9.15 மணி நிலவரம்) இந்திய ரூபாய் மதிப்பு 36 காசுகள் சரிந்து 70.04 ஆக உள்ளது. முன்னதாக நேற்றைய வர்த்தக நேர முடிவின் போது ரூபாய் மதிப்பு 69.68 ஆக இருந்தது.

மூலக்கதை