நேரடி வரி வருவாய் ரூ.8.74 லட்சம் கோடி

தினமலர்  தினமலர்
நேரடி வரி வருவாய் ரூ.8.74 லட்சம் கோடி

புதுடில்லி, ஜன. 8–நடப்பு நிதியாண்டின், ஏப்., – டிசம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில், நாட்டின் நேரடி வரி வருவாய், 14.1 சதவீதம் அதிகரித்து, 8.74 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதே காலத்தில் செலுத்தப்பட்ட வரியில், பிடித்தம் போக, திரும்ப அளிக்கப்பட்ட தொகை, 17 சதவீதம் உயர்ந்து, 1.30 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இதையடுத்து, நிகர வரி வசூல், 13.6 சதவீதம் உயர்ந்து, 7.43 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது.இது, நடப்பு 2018- – 19ம் நிதியாண்டின், நேரடி வரி வசூல் இலக்கான, 11.50 லட்சம் கோடி ரூபாயில், 64.7 சதவீதமாகும். மதிப்பீட்டு காலத்தில், முன்கூட்டிய வரி வசூல், 14.5 சதவீதம் ஏற்றம் கண்டு, 3.64 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
கூடுதலாக செலுத்திய வரியை திரும்ப அளித்த பின், கார்ப்பரேட் நிறுவனங்கள் வரி மற்றும் தனி நபர் வருமான வரி வாயிலான நிகர வருவாய், முறையே, 16 சதவீதம் மற்றும் 14.8 சதவீதம் அதிகரித்துள்ளது.கடந்த நிதியாண்டில், தானாக முன்வந்து வருவாயை அறிவிக்கும் திட்டத்தில், 10 ஆயிரத்து, 844 கோடி ரூபாய் வரி வருவாய் கிடைத்தது. இது, நடப்பு நிதியாண்டின், வரி வருவாயில் சேர்க்கப்படவில்லை என, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்து உள்ளது.

மூலக்கதை