குல்தீப் யாதவிடம் நிறைய எதிர்பார்க்கலாம்: பயிற்சியாளர் பரத் அருண் புகழாரம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
குல்தீப் யாதவிடம் நிறைய எதிர்பார்க்கலாம்: பயிற்சியாளர் பரத் அருண் புகழாரம்

சிட்னி: இந்திய அணியின் ஸ்பின் பவுலர்  குல்தீப் யாதவிடம் இன்னும் நிறைய எதிர்பார்க்கலாம் என பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் புகழாரம் சூட்டியுள்ளார். ஆஸி.

டெஸ்ட் அணியை முதன் முதலில் அந்த மண்ணில் எதிர்கொண்டு தொடரின் கடைசி போட்டியில் சிட்னி மைதானத்தில் குல்தீப் யாதவ் களமிறக்கப்பட்டார். இதில் அபாரமாக பந்து வீசிய அவர், 99 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து, ஆஸி.

வீரர்கள் 5 பேரை ஆட்டமிழக்கச் செய்தார். இதனால் அந்த அணி 300 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆக, முதல் இன்னிங்சில் 322 ரன்கள் முன்னிலை பெற்றது இந்தியா. குல்தீப்பின் சிறப்பான பந்து வீச்சு குறித்து அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் கூறுகையில், ‘‘அவரிடம் இருந்து இன்னும் நீங்கள் நிறைய எதிர்பார்க்கலாம்.

நுட்பமான பந்து வீச்சு என்பது அவரிடம் இயற்கையிலேயே அமைந்திருக்கிறது. கிரீசை முழுவதுமாக பயன்படுத்திக் கொண்டு, அவர் பந்து வீசுவதால், எதிரணி பேட்ஸ்மேன்கள் திணறுகின்றனர்.

 ரவுண்ட் தி விக்கெட், ஓவர் தி விக்கெட் என எல்லா திசையிலும் அவர் ஜொலிக்கிறார்.

விக்கெட்டு விட்டு நன்று விலகி சென்று, விக்கெட்டை குறிபார்த்து பந்து வீசுவதில் அவர் வல்லவர். ஒருநாள் போட்டிகளில் ஸ்பின் பவுலிங்கில் அவர்தான் நம்பர் 1 என்பது என்னுடைய கருத்து.

டெஸ்ட் போட்டிகளிலும் அவரிடம் இருந்து நீங்கள் இன்னும் நிறைய எதிர்பார்க்கலாம். இங்கிலாந்தில் நடந்த தொடரில் அவருக்கான இடம் கிடைக்கவில்லை. , ஆனால் இந்த தொடரில் வாய்ப்பு கிடைத்த ஒரு போட்டியில் அவர் தன்னை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

இந்தப் போட்டி அவரது நம்பிக்கையின் அளவை அதிகப்படுத்தியிருக்கும். இந்தப் போட்டிக்கு இரண்டு ஸ்பின்னர்களுடன் களமிறங்குவது என்று சிட்னி போட்டிக்கான வலை பயிற்சியின் போதே நாங்கள் முடிவு செய்து விட்டோம்’’ என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.

‘‘டெஸ்ட் போட்டிகளில் நிலையான இடத்தை பிடிக்க நான் இன்னும் அதிகம் உழைக்க வேண்டும்’’ என்று குல்தீப் யாதவ் தன்னை நோக்கி குவியும் பாராட்டு மழைகளுக்கு அடக்கமாக பதிலளித்துள்ளார். இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி சிட்னியில் வரும் 12ம் தேதி நடைபெறுகிறது.

2வது  ஒருநாள் போட்டி வரும் 15ம் தேதி அடிலெய்டிலும், 3வது ஒருநாள் போட்டி வரும் 18ம் தேதி மெல்போர்னிலும் நடைபெற உள்ளது. ஆஸ்திரேலிய பயணத்தை முடித்துக் கொண்டு, இந்திய அணி நியூசிலாந்து செல்ல உள்ளது.

அங்கு 5 ேபாட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் இந்திய அணி ஆடவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி, நேப்பியரில் வரும் 23ம் தேதி நடைபெறவுள்ளது.

.

மூலக்கதை