பி.எப்., பய­னா­ளி­க­ளுக்கு புதிய மென்­பொ­ருள்

தினமலர்  தினமலர்
பி.எப்., பய­னா­ளி­க­ளுக்கு புதிய மென்­பொ­ருள்

பி.எப்., உறுப்­பி­னர்­கள் தங்­கள் முத­லீட்­டில் சம­பங்கு வாய்ப்பை அதி­க­மாக்கி கொள்­ளும் வாய்ப்பு அறி­மு­க­மா­க­லாம் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இதற்­கான மென்­பொ­ருள், பி.எப்., நிறு­வ­னத்­தால் உரு­வாக்­கப்­பட்டு வரு­கிறது.


பி.எப்., நிதியை நிர்­வ­கித்து வரும் அமைப்பு தற்­போது, முத­லீடு செய்­யக்­கூ­டிய டெபா­சிட்­டில், 15 சத­வீ­தம் தொகையை, ஈ.டி.எப்.,ல் முத­லீடு செய்து வரு­கிறது. இது சம­பங்கு சார்ந்த முத­லீ­டாக அமைந்­தா­லும், உறுப்­பி­னர்­கள் கணக்­கில் இது தனியே பிர­தி­ப­லிப்­ப­தில்லை.


இந்­நி­லை­யில், பி.எப்., அமைப்பு, ரொக்­கம் மற்­றும் ஈ.டி.எப்., சார்ந்த முத­லீட்டை தனித்­த­னியே
காண்­பிக்­கும் வகை­யி­லான மென்­பொ­ருளை உரு­வாக்கி வரு­வ­தாக செய்தி வெளி­யாகி உள்­ளது.இந்த மென்­பொ­ருள் பயன்­பாட்­டிற்கு வந்த பின், உறுப்­பி­னர்­கள் விரும்­பி­னால், சம்­பங்கு சார்ந்த முத­லீட்டை அதி­க­ரித்­துக்­கொள்ள வாய்ப்­ப­ளிக்­கப்­படும் எனத்­தெ­ரி­கிறது. மேலும் பல டிஜிட்­டல் சாத­னங்­களும் அறி­மு­கம் செய்­யப்­பட உள்ளன.

மூலக்கதை