விஜய் சேதுபதி படத்தில் மானஸ்வி!

PARIS TAMIL  PARIS TAMIL
விஜய் சேதுபதி படத்தில் மானஸ்வி!

 நடிகை நயன்தாரா நடிப்பில் உருவான படம் 'இமைக்கா நொடிகள்'. கடந்த ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான இந்தப் படத்தில், அவரது மகளாக மானஸ்வி என்ற குழந்தை நட்சத்திரம் நடித்திருந்தார். அவரது நடிப்பை பலரும் பாராட்டி இருந்தனர். இவர் காமெடி நடிகர் கொட்டாச்சியின் மகள் ஆவார்.

 
இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி, காயத்ரி ஆகியோர் நடிக்க, சீனு ராமசாமியின் இயக்கத்தில் உருவாகும் புதிய படமான 'மாமனிதன்' படத்திலும் மானஸ்வி முக்கியமான ஒரு ரோலில் நடிக்க இருக்கிறார்.

மூலக்கதை