பிரிமியர் பேட்மின்டன் சாய்னாவை வீழ்த்தினார் சிந்து

தமிழ் முரசு  தமிழ் முரசு
பிரிமியர் பேட்மின்டன் சாய்னாவை வீழ்த்தினார் சிந்து

புனே: பிரிமியர் பேட்மின்டன் லீக் தொடரில், நேற்று நடந்த ஆட்டத்தில் ஐதராபாத் அணியை சேர்ந்த சிந்து, வடகிழக்கு அணி வீராங்கனை சாய்னாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றார். பிரிமியர் பேட்மின்டன் லீக் போட்டி தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

இத்தொடரில், சென்னை, அகமதாபாத், ஐதராபாத், வடகிழக்கு உள்ளிட்ட அணிகள் பங்கேற்றுள்ளன. இந்தியாவின் முன்னணி வீரர், வீராங்கனைகள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த வீரர்கள் இதில் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

புனே நகரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில், ஐதராபாத் மற்றும் வடகிழக்கு அணிகள் பலப்பரிட்சை நடத்தின. மகளிர் ஒற்றையர் பிரிவில் நடந்த ஆட்டத்தில், இந்திய நட்சத்திர வீராங்கனைகளான பி. வி. சிந்து, சாய்னா ஆகியோர் மோதினர்.

ஐதராபாத் அணி சார்பில் களமிறங்கிய சிந்து, வடகிழக்கு அணி வீராங்கனை சாய்னா இடையேயான ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது. இதில், சிந்து அபாரமாக விளையாடி 11-15, 15-9, 15-5 என்ற கணக்கில் சாய்னாவை வென்றார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த ஆட்டத்தில் ஐதராபாத் அணியை சேர்ந்த ஹியூன் 10-15, 15-13, 15-9 என்ற கணக்கில் வடகிழக்கு அணி வீரர் சயீனை வென்றார்.

.

மூலக்கதை