டி-20 உலக கோப்பை போட்டி சூப்பர் சுற்றில் இடம்பெறாத இலங்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
டி20 உலக கோப்பை போட்டி சூப்பர் சுற்றில் இடம்பெறாத இலங்கை

துபாய்:  டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்தாண்டு(2020) ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. அக்டோபர் 18 முதல் நவம்பர் 15ம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியில் சூப்பர்-12 சுற்றுக்கு அணிகள் தேர்வு செய்யப்படும்.
கடந்தாண்டு நிலவரப்படி, தரவரிசையில் டாப்-8 இடங்களை வகிக்கும் அணிகள் மட்டுமே நேரடியாக தகுதிபெற முடியும்.

பாகிஸ்தான், இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் முதல் 8 இடங்களில் உள்ளன. இந்த அணிகள் சூப்பர்-12 சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.

9, 10வது இடங்களில் உள்ள இலங்கை, வங்கதேச அணிகள் லீக் சுற்றில் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஐசிசியின் முழுநேர உறுப்பினர் என்ற அந்தஸ்து பெற்ற 18 மாதங்களிலேயே ஆப்கானிஸ்தான் அணி நேரடியாக உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.   இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட சில அணிகள் லீக் சுற்றில் விளையாடும். இதில், முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-12 சுற்றுக்கு முன்னேறும்.

லீக் சுற்றில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சூப்பர் சுற்றுக்கு முன்னேறுவோம் என இலங்கை மற்றும் வங்கதேச அணியின் கேப்டன்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


.

மூலக்கதை