தமிழகத்தில் தான் நானும் பிறந்தேன்- கூகுள் சுந்தர் பிச்சையை விசாரணை செய்த பெண் எம்.பி. பிரமிளா ஜெயபால் பெருமிதம்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

தமிழகத்தில் தான் நானும் பிறந்தேன் என கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சையை விசாரணை செய்த அமெரிக்க பெண் எம்.பி. பிரமிளா ஜெயபால் பெருமிதம் அடைந்துள்ளார்.

கூகுள் நிறுவனத்தின் செயல்பாடுகள், அரசியல் கட்சிகளிடம் பாரபட்சம் காட்டுவது, சீனாவில் புதிய சர்ச் இஞ்சின் அறிமுகம் செய்ய இருப்பது மற்றும் கூகுள் பயனாளர்களின் ரகசிய விவரங்கள் பாதுகாப்பு குறித்து நிறைய குற்றச்சாட்டுகளை அமெரிக்க அரசு முன்வைத்தது.

அமெரிக்க நாடாளுமன்ற விசாரணைக் குழுவின்   சந்தேகங்களைத் தீர்ப்பதற்காக கேப்பிட்டல் ஹில்லிற்கு, கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை சென்றார்.நாடாளுமன்ற விசாரணைக் குழுவினர்  கேட்ட பல்வேறு விதமான கேள்விகளுக்கு சுந்தர் பிச்சை பதில் அளித்தார்.

நாடாளுமன்ற விசாரணைக்குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த பெண் எம்.பி. ஒருவரும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் இருக்கும் 7 -வது மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பவர் தமிழகத்தைச் சேர்ந்த பிரமிளா ஜெயபால். 

பல காட்டமான கேள்விகளுக்கு இடையே சுந்தர் பிச்சைக்கு முகம் மலர வாழ்த்து ஒன்றை,  பிரமிளா ஜெயபால் தெரிவித்தார்.

இது குறித்து சுந்தர் பிச்சையிடம் அவர் பேசும்போது, ''என்னைக் கொஞ்சம் தனிப்பட்ட விஷயத்தைப் பேச அனுமதியுங்கள். சுந்தர் நானும் இந்தியாவில் நீங்கள் பிறந்த தமிழகத்தில்தான் பிறந்தேன்.இன்று உலகின் மிக முக்கியமான இருவேறு பொறுப்புகளில் நாம் இருவரும் பதவி வகிக்கின்றோம். 

வெளிநாடுகளில் இருந்து இந்நாட்டிற்கு வரும் மக்கள் குறித்து பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன. ஆனால் வெளிநாட்டினர் இந்நாட்டிற்கு அளிக்கும் பங்களிப்பு மகத்தானது.

இவ்வாறு பிரமிளா ஜெயபால் கூறினார்.

53 வயதாகும் பிரமிளா ஜெயபால்  சென்னையில் பிறந்தவர். அமெரிக்காவில் படிப்பதற்காக மாணவராக அங்கு சென்றவர்.  சுந்தர் பிச்சையும் சென்னையில் பிறந்து ஐ.ஐ.டி காரக்பூரில் படித்துவிட்டு பின்பு 2004 ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இனப்படுகொலை, பாலியல் வன்கொடுமைகள், மற்றும் வெறுப்பினை வெளிப்படுத்தும் விதமான பேச்சுகள் குறித்து தன்னுடைய கேள்விகளையும் சந்தேகங்களையும் விசாரித்தார் பிரமிளா ஜெயபால்.
வேலை செய்யும் இடங்களில் பணியாளர்களின் பாதுகாப்பு குறித்தும் கேள்விகள் எழுப்பினார் பிரமிளா ஜெயபால். அனைத்து கேள்விகளுக்கும் அழகாகவும், பொறுப்பாகவும் சுந்தர் பிச்சை பதில் கூறினார்.

மூலக்கதை