செயற்கை மழை பொழிய குட்டி விமானம் கண்டுபிடித்து உடுமலை மாணவன் திருச்செல்வன் சாதனை!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

செயற்கை மழை பொழிய  உதவும் குட்டி விமானம் கண்டுபிடித்து உடுமலை பள்ளி மாணவன் திருவருட்செல்வன் சாதனை படைத்து உள்ளார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஆர்கேஆர்., கிரிக்ஸ் பள்ளியின் 11ம் வகுப்பு மாணவர் திருவருட்செல்வன். இவரது தந்தை எலக்ட்ரீசியனாக உள்ளார். சிறு வயதில் இருந்த ஏதாவது கண்டுபிடிக்க வேண்டும் என ஆர்வம் கொண்ட இந்த மாணவர், தற்போது செயற்கை மழை பொழிய வைக்க உதவும் ஆளில்லா விமானம் கண்டுபிடித்து உள்ளார். 

ஏரோனாட்டிகல் பொறியாளர்கள் கண்டுபிடிக்கக் கூடிய, ஆளில்லா விமானத்தை 11ம் வகுப்பு மாணவன் கண்டுபிடித்தது தான் சாதனையே. 

இது குறித்து மாணவன் திருவருட்செல்வன் கூறியதாவது:

இன்றைய காலகட்டத்தில் இயற்கை சீற்றம் மற்றும் பல்வேறு பிரச்னைகளால் பூமி வெப்பம் அடைகிறது. ஆலைகளில் இருந்து வெளி வரும் கழிவுகள் மற்றும் கரும்புகையால் சுற்றுச்சூழல் அதிகளவில் மாசுபடுகிறது. இந்த நிலையில், ஹெலிகேம் மாதிரி ஆளில்லா விமானம் ஒன்று உருவாக்கி, பேட்டரி பவர் மூலம் பறக்கக் கூடிய, மழை இல்லாத காலங்களில் இக்கருவியை பயன்படுத்தி செயற்கை மழையைப் பொழிய வைக்க முடியும். 

கேடு விளைவிக்காத பொருட்களைக்  கொண்டு, இந்த ஆளில்லாத விமானம் மூலம் குறிப்பிட்ட தூரத்துக்கு அனுப்பி பொருட்களை மேகங்கள் மீது தூவினால் மழை பெய்யும். தற்போது 400 அடி உயரம் வரை செல்லும் வகையில் ஆளில்லா விமானம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசின் ஆதரவும்,போதுமான நிதியும் கிடைத்தால் இதைவிட பெரிய விமானம் தயாரிக்க முடியும். 

இவ்வாறு திருவருட்செல்வன் கூறினார்.

மாணவனின் இந்த கண்டுபிடிப்பு பல மாவட்டங்களில் நடந்த அறிவியல் கண்காட்சியில் முதல் பரிசைப் பெற்று உள்ளது.  27ந்தேதி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற உள்ள தேசிய அறிவியல் மாநாட்டில் பங்கேற்க மாணவன் திருவருட்செல்வனுக்கு அழைப்பு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சாதனை மாணவன் திருவருட்செல்வனை, பள்ளி தாளாளர் கார்த்திகேயன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

மூலக்கதை