சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் பொதுப்பிரிவினர் வயது வரம்பை 27 ஆக குறைக்க நிதி ஆயோக் பரிந்துரை!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் பொதுப்பிரிவினர் வயது வரம்பை 27 ஆக குறைக்க நிதி ஆயோக் பரிந்துரை!

சிவில் சர்வீஸ் தேர்வை எழுதுவதற்கான பொதுப் பிரிவினரின் அதிகப்பட்ச வயது வரம்பை 27 ஆக குறைக்க வேண்டும் என நிதி ஆயோக் பரிந்துரை செய்து உள்ளது.

நிதி ஆயோக் சார்பாக,  “புதிய இந்தியாவின் யுக்தி 75” என்ற ஆவணம் வெளியிடப்பட்டது.  இந்த ஆவணத்தில் சிவில் சர்வீஸ்  தேர்வுக்கான வயது வரம்பை குறைக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.  

குடிமைப்பணிகள் தேர்வு எனப்படும் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான அதிகபட்ச  வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு தற்போது 30 ஆக உள்ளது.  இந்த நிலையில், நிதி ஆயோக் தனது ஆவணத்தில், ‘சிவில் சர்வீஸ் தேர்வுக்கான பொதுப்பிரிவினரின் அதிகப்பட்ச வயது வரம்பு 2022-2023ம் ஆண்டுக்குள் படிபடியாக 27 ஆக குறைக்கப்பட வேண்டும்.

பொதுவான திறமையின்  மூலமாக நபர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். பின்னர், தனித் திறமையின் அடிப்படையில் பொருத்தமான பணி இடங்களை அவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். அனைத்து சிவில் சர்வீஸ் தேர்வுகளும் அகில இந்திய தர  வரிசையில் ஒன்றாக கொண்டு வரப்பட வேண்டும். இவற்றில் இருந்து ஆட்களை தேர்வு செய்வதற்கு மாநிலங்களை ஊக்குவிக்கலாம்’ என்று அதில்  கூறப்பட்டு உள்ளது. 

மூலக்கதை