இந்திய வங்கிகள் கூட்டமைப்பு தொடர்ந்த மல்லையா மீதான திவால் வழக்குலண்டன் ஐகோர்ட்டுக்கு மாற்றம்

தினகரன்  தினகரன்
இந்திய வங்கிகள் கூட்டமைப்பு தொடர்ந்த மல்லையா மீதான திவால் வழக்குலண்டன் ஐகோர்ட்டுக்கு மாற்றம்

லண்டன்: வங்கிகளிடம் 9 ஆயிரம் கோடி கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் மோசடி செய்த தொழிலதிபர் மல்லையா மீதான திவால் வழக்கு, லண்டன் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.  பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து 9 ஆயிரம் கோடி கடன் பெற்று அவற்றை திருப்பி செலுத்தாமல் தொழிலதிபர் மல்லையா லண்டன் தப்பி சென்றார்.  அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிபிஐ விசாரித்து வருகிறது.  இந்நிலையில்,  வங்கி கடன் மோசடி தொடர்பாக மல்லையாவை நாடு கடத்தக்கோரி இங்கிலாந்து அரசுக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. அதன்படி, தொடரப்பட்ட வழக்கில் கடந்த வாரம் லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் மல்லையாவை நாடு கடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டது.  அவரை இந்தியா கொண்டு வருவதற்காக, இங்கிலாந்து வெளியுறவு துறை அமைச்சகத்தின் ஒப்புதலை பெறுவற்காக இந்திய அரசு காத்திருக்கிறது. இந்நிலையில்,  தனிநபர் திவால் சட்டத்தின்படி மல்லையா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான 13 வங்கிகளின் கூட்டமைப்பு சார்பாக இங்கிலாந்தில் உள்ள நார்தம்டன்  நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை நீதிமன்றம் நேற்று முன்தினம் விசாரணைக்கு ஏற்றது. இந்த வழக்கு லண்டன் உயர் நீதிமன்றத்தின் திவால் வழக்குகள் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மல்லையா மீது தனிநபர் திவால் நடவடிக்கை எடுக்கப்பட்டால், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் இருக்கும் அவரது சொத்துக்கள் மூலமாக வங்கிகள் கடன்களை வசூல் செய்யலாம். வங்கிகளின் கடன் பாக்கிகள் வசூலாகும். 

மூலக்கதை