நாட்டிலேயே அதிகளவில் வெளிநாட்டு பயணிகளை கவரும் சுற்றுலா தளங்களின் பட்டியல்: தாஜ்மகால் முதலிடம்

தினகரன்  தினகரன்
நாட்டிலேயே அதிகளவில் வெளிநாட்டு பயணிகளை கவரும் சுற்றுலா தளங்களின் பட்டியல்: தாஜ்மகால் முதலிடம்

டெல்லி: நாட்டிலேயே அதிக அளவிற்கு வெளிநாட்டு பயணிகளை கவரும் சுற்றுலா தளங்கள் பட்டியலில் மாமல்லபுரம் 10வது இடத்தை பெற்றுள்ளது. மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள குறிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு இந்தியாவிற்கு சுற்றுலாவாக வந்த வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 80.3 லட்சமாக இருந்த நிலையில் ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரை 93. லட்சமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016 மற்றும் 2017ல் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலுக்கு நாட்டிலேயே அதிக அளவிற்கு சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். 6,68,403 பேர் தாஜ்மஹாலை அழகை கண்டுகளித்துள்ளனர். இதையடுத்து ஆக்ரா கோட்டை, டெல்லியின் குதுப்மினார், ஹுமாயுன் கல்லறை ஆகியவற்றை இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன. தென் இந்தியாவின் கேரளாவின் மத்தன்சேரி அரண்மனை 7ஆம் இடத்தையும், தமிழகத்தின் மாமல்லபுரம் 10ஆம் இடத்தையும் பிடித்துள்ளன. 2016 மற்றும் 2017ஆம் ஆண்டில் 62,110 வெளிநாட்டுப் பயணிகள் மாமல்லபுரத்திற்கு வருகை தந்துள்ளனர்.                 

மூலக்கதை