உப்பு ரொம்ப தப்பு:? இல்லை என்கிறது ஆராய்ச்சி

தினமலர்  தினமலர்
உப்பு ரொம்ப தப்பு:? இல்லை என்கிறது ஆராய்ச்சி

நியூயார்க்: உப்பை அதிகமாக பயன்படுத்துவதால், மாரடைப்பு, ரத்த அழுத்தம் அதிகரிப்பு, சிறுநீரக பாதிப்பு ஏற்படும் என டாக்டர்கள் பல ஆண்டுகளாக எச்சரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், இது சரியானது இல்லை என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்காவில் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வில் ஈடுபட்ட டாக்டர் யான்சி கூறுகையில், இதயம் ரத்தத்தை பிரித்து அனுப்ப முடியாத சூழ்நிலை ஏற்படும் போது, இதய செயலிழப்பு ஏற்படுகிறது. இதனால், அமெரிக்காவில் மட்டும் 67 லட்சம் பேர் அவதிப்பட்டு வருகின்றனர். அதிக ரத்த அழுத்தமும், இதயத்திற்கு அதிக வேலை பளுவை ஏற்படுத்தி பலவீனப்படுத்திவிடும். இதற்கு சிகிச்சை அளிக்கும் போது, உப்பை குறைக்க வலியுறுத்தப்படும்.
சமீபத்தில், இதய செயலிழப்புக்கு உப்பை குறைப்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. 479 நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 9 முடிவுகள் கிடைத்தன. அதில் ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் உப்பை குறைப்பதால், உயிரிழப்பு ஏற்படுவதோ, மாரடைப்பு ஏற்படுவதோ குறையவில்லை. 4 பேரில் 2 பேருக்கு இதய செயல்பாட்டில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. 2 பேருக்கு மாற்றம் ஏற்பட்டது. இதனால் உப்புக்கும் மற்ற நோய்களுக்கும் சம்மந்தம் இல்லாமல் இருக்கலாம் என்றார் அவர்.தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருகின்றன.

மூலக்கதை