ஐபிஎல் 2019 ஏலம் : ஏலம் போகாத கிரிக்கெட் வீரர்கள் விவரம்

தினகரன்  தினகரன்
ஐபிஎல் 2019 ஏலம் : ஏலம் போகாத கிரிக்கெட் வீரர்கள் விவரம்

ஜெய்ப்பூர் : 2019ம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் 8 அணிகளை சேர்ந்த உரிமையாளர்கள், பயிற்சியாயளர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், விக்கெட் கீப்பராக ஏலத்தில் விடப்பட்ட வீரர் நமன் ஒஜ்ஹா, பென் மெக்டெர்மாட், இந்திய வீரர் யுவராஜ் சிங், கிறிஸ் ஜோர்டன், ஆல் ரவுண்டராக ஏலத்தில் விடப்பட்ட இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ், நியூசிலாந்து வீரர் ப்ரெண்டான் மெக்கெல், மார்ட்டின் குப்டில் ஆகியோரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை.

மூலக்கதை