பஞ்சாப் நேஷனல் வங்கியில் முறைகேடு மெகுல் சோக்‌ஷிக்கு ரெட்கார்னர் நோட்டீஸ்: இன்டர்போல் நடவடிக்கை

தினகரன்  தினகரன்
பஞ்சாப் நேஷனல் வங்கியில் முறைகேடு மெகுல் சோக்‌ஷிக்கு ரெட்கார்னர் நோட்டீஸ்: இன்டர்போல் நடவடிக்கை

புதுடெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் பண மோசடி செய்து விட்டு வெளிநாட்டில் பதுங்கியுள்ள பிரபல வைர வியாபாரியின் உறவினர் மெகுல் சோக்‌ஷிக்கு எதிராக சர்வதேச போலீசார் ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13.000 கோடி மோசடி செய்த வழக்கில், பிரபல வைர வியாபாரியின் நெருங்கிய உறவினர் மெகுல் சோக்‌ஷிக்கு எதிராக சர்வதேச போலீசார் ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.  குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,000 கோடி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி விட்டார். இந்த வழக்கில் இவரது நெருங்கிய உறவினரான கீதாஞ்சலி குழும உரிமையாளர் மெகுல் சோக்‌ஷி ஆகியோரை அமலாக்கத்துறையினர் தேடி வந்தனர். மெகடந்த ஜனவரி முதல் வராத்தில் இந்தியாவில் இருந்து தப்பிச்சென்ற மெகுல் சோக்‌ஷி, தனது நிறுவனம் மூலம் வங்கியில் 7,080.86 கோடி மோசடி செய்துள்ளார். நீரவ் மோடி 6,000 ேகாடிக்கு மேல் மோசடி செய்துள்ளார். இதுதவிர, சோக்‌ஷி வங்கிகளில் 5,000 கோடி கடன் வாங்கி மோசடி செய்த வழக்கும் உள்ளது. இவர்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.  மெகுல் சோக்‌ஷி ஆன்டிகுவா நாட்டில் குடியுரிமை வாங்கியுள்ளார். எனவே அவர் அங்கு தஞ்சம் அடைந்திருக்கலாம் எனக்கருதப்பட்டது. இவர் மீது ரெட்கார்னர் நோட்டீஸ் (சர்வதேச கைது வாரன்ட்) பிறப்பிக்க சர்வதேச போலீசிடம் (இன்டர்போல்) சிபிஐ கோரியிருந்தது. ஆனால், அரசியல் சதி காரணமாகவே தனக்கு எதிராக வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன என கூறிய மெகுல் சோக்‌ஷி, தனது உடல் நிலை, பாதுகாப்புக்கு ஏற்ப இந்திய சிறைச்சாலை இல்லை எனவும் கூறி ரெட்கார்னர் நோட்டீசுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.  இந்த சூழ்நிலையில், சிபிஐ கோரிக்கையை ஏற்று, மெகுல் சோக்‌ஷி மீது சர்வதேச போலீசார் ரெட்கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர் என, சிபிஐ செய்து தொடர்பாளர் அபிஷேக் தயால் கூறியுள்ளார்.

மூலக்கதை