சிறப்பு தோற்றத்தில் ரம்யா நம்பீசன், பார்வதி, காயத்ரி

தினமலர்  தினமலர்
சிறப்பு தோற்றத்தில் ரம்யா நம்பீசன், பார்வதி, காயத்ரி

விஜய் சேதுபதி நடித்த பீட்சா, சேதுபதி படங்களில் நாயகியாக நடித்தவர் ரம்யா நம்பீசன். அப்படி அவருடன் நடித்த இரண்டு படங்களுமே ரம்யாவுக்கு வெற்றிப்படங்களாகவே அமைந்தன.

இந்த நிலையில், தற்போது விஜய் சேதுபதி நடித்துள்ள 25வது படமான சீதக்காதியில் அர்ச்சனா நாயகியாக நடித்துள்ளார். ரம்யா நம்பீசன் ஒரு சிறிய வேடத்தில் நட்புக்காக நடித்துள்ளார்.

அதேபோல், மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள பார்வதியும், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி, புரியாத புதிர் போன்ற படங்களில் நடித்த காயத்ரியும், சீதக்காதியில் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார்.

மூலக்கதை