எல்லா துறையிலும் பெண்களுக்கு ஏற்றத்தாழ்வு உண்டு

தினமலர்  தினமலர்
எல்லா துறையிலும் பெண்களுக்கு ஏற்றத்தாழ்வு உண்டு

சாக் ஷி அகர்வால்யோகன் படம் மூலம் தமிழுக்கு வந்தவர், சாக் ஷி அகர்வால். ரஜினியின் காலா படம், இவருக்கு பெரிய அடையாளத்தை கொடுத்தது. அவருடன் பேசியதிலிருந்து:


சினிமா வாய்ப்பு எப்படி?


சின்ன வயது முதலே, ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக வேண்டும் என்பதே, என் ஆசை. அண்ணா பல்கலையில், இன்ஜினியரிங் படித்தேன். தங்கப் பதக்கம் பெற்றேன். ஒரு அனுபவத்திற்காக மாடலிங் சென்று, அப்படியே நடிக்க வந்து விட்டேன்.


இதுவரை நடித்துள்ள படங்கள்?


யோகன் என் முதல் படம். அதன் பின் அமெரிக்கா சென்று, நடிப்பு பற்றி பாடம் படித்தேன். வந்ததும், காலா படம் கிடைத்தது. மலையாளத்தில் பிஜு மேனன் உடன் நடித்தேன்.எந்த மாதிரியான கதைகளில் நடிக்க விருப்பம்?நாயகியாக தான் நடிக்க வேண்டும் என இல்லை. திரையில், 10 நிமிடங்கள் வந்தால் கூட, ரசிகர்களின் மனதில் எப்படி நிற்கிறோம் என்பது தான் முக்கியம். இப்போது தெளிவாக கதை கேட்டு, திருப்தி அளித்தால் மட்டுமே நடிக்கிறேன். படம் முழுக்க வந்தாலும், கதை நன்றாக இல்லை என்றால், வீண் தான்.


அடுத்த படம் என்ன?


பகைவனுக்கு அருள்வாய் படத்தில் நடிக்கிறேன். ரொம்ப வித்தியாசமான கதை. நல்ல கதாபாத்திரம் கிடைத்துள்ளது.


காலா படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவம்?


ரஜினியுடன் புகைப்படம் எடுப்பதற்கே, காலம் முழுக்க காத்திருக்க வேண்டும் என நினைக்கும் அளவுக்கு, நான் அவரது ரசிகை. அவருடன் நடிப்பது என்றால், கேட்கவே வேண்டாம். என் வாழ்க்கையை பொறுத்தவரை, காலாவுக்கு முன், காலாவுக்கு பின் என, நிறைய விஷயங்களில் மாற்றம் நடந்துள்ளது.


நடிப்பு தவிர எதிர்கால திட்டம் ஏதாவது?


இப்போதைக்கு அப்படி எதுவும் இல்லை. அனைத்து விதமான கேரக்டர்களிலும் நடிக்க ஆசை. ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க வேண்டும்; அதன் பின் தான் மற்றவை.'மீ டூ' குறித்து?இது நல்ல விஷயம் தான். ஆனால், இதை எந்தளவு நல்ல விதமாக பயன்படுத்துகிறோம் என்பது முக்கியம்.


இந்தாண்டில் கற்றுக் கொண்ட விஷயம்?


சினிமாவுக்கு வந்து, ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன. நிறைய கற்றுக் கொண்டு இருக்கிறேன். இந்தாண்டு முதல், 'பாசிடிவ்' ஆன மனநிலையில் தான் இருப்பேன். நான் மட்டுமல்ல, என்னை சுற்றி இருப்பவர்களும் நல்ல விஷயங்கள் செய்ய வேண்டும். எல்லா துறையிலும் பெண்களுக்கு ஏற்றத் தாழ்வுகள் இருக்கும். ஒவ்வொரு நாளும் சவாலானதே. எல்லாமே, நம் மன ஓட்டத்தில் தான் இருக்கிறது. அது நன்றாக இருந்தால், எல்லாமே வெற்றி தான்.


புத்தாண்டை எப்படி வரவேற்கப்போகிறீர்கள்?


தற்போது, ஆன்மிக பாதையில் சென்று கொண்டிருக்கிறேன். அந்த சக்தி நல்ல பாதையை தரும்.

மூலக்கதை