ரிசர்வ் வங்கியும் அரசின் அங்கம்தான்: சொல்கிறார் கட்கரி

தினகரன்  தினகரன்
ரிசர்வ் வங்கியும் அரசின் அங்கம்தான்: சொல்கிறார் கட்கரி

புதுடெல்லி: மத்திய அரசுடன் மோதலை தொடர்ந்து ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த உர்ஜித் படேல் பதவியை ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து புதிய கவர்னராக பதவியேற்ற சக்தி காந்ததாஸ், ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி, கவுரவம் காக்கப்படும் என்றார். இதற்கு பதிலளிக்கும் வகையில் டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி அதிகாரத்தில் மத்திய அரசு ஒரு போதும் தலையிடாது. ஏற்ற இறக்கங்கள் எங்கேயும் இருக்கத்தான் செய்யும். எந்த நிறுவனத்தையும் நாங்கள் அழிக்க மாட்டோம். ரிசர்வ் வங்கியும் மத்திய அரசின் அங்கம்தான். அது தன்னாட்சி அதிகாரத்தை நாங்கள் ஏற்கிறோம். அதேநேரம், மத்திய அரசின் தொலைநோக்கு திட்டங்களையும் ரிசர்வ் வங்கி ஆதரிக்க வேண்டும் என்றார்.

மூலக்கதை