இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்டவை

தினமலர்  தினமலர்
இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்டவை

புதுடில்லி:இந்தியாவில், நடப்பாண்டில், கூகுள் தேடுபொறியில் மிகவும் அதிகமாக தேடப்பட்டவை குறித்த பட்டியலை, கூகுள் நிறுவனம் வெளியிட்டு உள்ளது.


கூகுள் நிறுவனம், ‘2018ம் ஆண்டில் தேடுதல்’ எனும் அறிக்கையை வெளியிட்டுள்ளது.இதில், இந்தியாவில் நடப்பாண்டில், ஒன்பது பிரிவுகளின் கீழ், எவை குறித்து தெரிந்து கொள்ள அதிகம் தேடப்பட்டது என்ற பட்டியல் இடம்பெற்றுள்ளது.கூகுள் நிறுவனம், ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற பட்டியலை வெளியிட்டு வருகிறது.அந்த வகையில், இந்த ஆண்டில் அதிகம் தேடப்பட்டது குறித்த அறிக்கையில் சொல்லப்பட்டு உள்ளதாவது:


‘எப்படி’ என்ற பிரிவில், ‘வாட்ஸ் ஆப்பில் ஸ்டிக்கர்கள் அனுப்புவது எப்படி?’ என்பது குறித்து தான் அதிகமானவர்கள் தேடி உள்ளனர்.அடுத்து, ‘ஆதாரை எப்படி மொபைல் எண்ணுடன் இணைக்கலாம்?’ என்பது குறித்து தேடியுள்ளனர்.ஸ்மார்ட்போன் பிரிவில் அதிகம் தேடப்பட்டது, ஒன்பிளஸ் 6 போன் ஆகும். இதற்கு அடுத்து, விவோ வி9 தேடப்பட்டுள்ளது. அடுத்து, ரியல்மி 2புரோ போன் குறித்து தகவல் அறிய அதிகம் தேடியுள்ளனர்.


அருகில் உள்ளவற்றை தேடும் பிரிவில், மொபைல்போன் ஸ்டோர்கள் குறித்து அதிகம் தேடப்பட்டிருக்கிறது. அதற்கு அடுத்து தான் சூப்பர் மார்க்கெட், பெட்ரோல் நிலையங்கள் வருகின்றன.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை