அன்மோல்பிரீத் அதிரடி ஆட்டம் இந்தியா ஏ ஹாட்ரிக் வெற்றி

தினகரன்  தினகரன்
அன்மோல்பிரீத் அதிரடி ஆட்டம் இந்தியா ஏ ஹாட்ரிக் வெற்றி

வெலிங்டன்: நியூசிலாந்து ஏ அணியுடன் நடந்த 3வது ஒருநாள் போட்டியில் (அங்கீகாரமற்றது), 75 ரன் வித்தியாசத்தில் ஹாட்ரிக் வெற்றியை வசப்படுத்திய இந்தியா ஏ அணி 3-0 என தொடரை முழுமையாகக் கைப்பற்றி அசத்தியது. மவுன்ட் மவுங்காநுயி, பே ஓவல் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்று முதலில் பேட் செய்த இந்தியா ஏ 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 275 ரன் குவித்தது. தொடக்க வீரர் அன்மோல்பிரீத் சிங் அதிகபட்சமாக 71 ரன் (80 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசினார். இஷான் கிஷண் 39, ஷ்ரேயாஸ் அய்யர் 23, அங்கித் பாவ்னே 48, விஜய் ஷங்கர் 42, அக்சர் பட்டேல் 31 ரன் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து ஏ அணி, 44.2 ஓவரில் 200 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. செய்பர்ட் அதிகபட்சமாக 55 ரன் ( 73 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), டேரில் மிட்செல் 30, ரூதர்போர்டு 27, ரவீந்திரா 21 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் எடுக்கத் தவறினர். இந்தியா ஏ பந்துவீச்சில் சித்தார்த் கவுல் 4, கவுதம் 2, கலீல், அக்சர், குருணல், விஜய்ஷங்கர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 75 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா ஏ அணி 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்து ஏ அணியை ஒயிட் வாஷ் செய்தது.

மூலக்கதை