மயிலாப்பூர் கோயில் சிலைகள் காணாமல் போன விவகாரம்: திருமகளை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

தினகரன்  தினகரன்
மயிலாப்பூர் கோயில் சிலைகள் காணாமல் போன விவகாரம்: திருமகளை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

புதுடெல்லி: இந்து அறநிலையத்துறை அதிகாரி திருமகளை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இருந்து மயில் சிலை உட்பட 3 சிலைகள் காணாமல் போன வழக்கில் முன்ஜாமீன் கேட்டு அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அவரது மனுவை விசாரித்த நீதிபதிகள் திருமகளுக்கு முன்ஜாமின் வழங்கவில்லை. ஆனால் அதற்கு பதில் திருமகளை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். திருமகளின் முன்ஜாமின் மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்கவும் நோட்டீஸ் அனுப்பியிருக்கின்றனர். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலை 2004ம் ஆண்டு மயில், ராகு, கேது உள்ளிட்ட சிலைகள் காணாமல் போனது. அப்போது அறநிலையத்துறை அதிகாரியாக இருந்தவர் திருமகள் என்பதால் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. தான் எந்த நேரத்திலும் கைது கூடும் என்பதால், திருமகள் முன்ஜாமின் கேட்டபோது, அதனை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இதனை எதிர்த்து திருமகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோது அவரை கைது செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை