மீண்டும் தமிழில் விஜய் தேவரகொண்டா

தினமலர்  தினமலர்
மீண்டும் தமிழில் விஜய் தேவரகொண்டா

தெலுங்கில் அர்ஜூன் ரெட்டி, கீதா கோவிந்தம் என பல ஹிட் படங்களில் நடித்தவர் விஜய் தேவரகொண்டா. தமிழில், நோட்டா என்ற படத்தில் நடித்தார். அந்த படம் எதிர்பார்த்தபடி வெற்றியை கொடுக்கவில்லை.

இந்நிலையில், தற்போது சூர்யா நடிக்கும் என்ஜிகே படத்தை தயாரித்து வரும் டிரீம் வாரியர் நிறுவனம், விஜய் தேவரகொண்டா நடிக்கும் அடுத்த படத்தை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாரிக்கிறது.

ஸ்ரீ கார்த்தி என்ற புதுமுக இயக்குனர் இயக்குகிறார். காமெடியனாக யோகிபாபு ஒப்பந்தமாகியிருக்கும் நிலையில், தெலுங்கு காமெடியன்கள் ராகுல் ராமகிருஷ்ணா, பிரியதர்ஷி ஆகியோரும் நடிக்கிறார்கள். தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளுக்கும் பரிட்சயமான நாயகியை தேடி வருகிறார்கள்.

மூலக்கதை