சபரிமலையில் கெடுபிடிகளை தளர்த்த கோரி கேரள சட்டசபையில் கடும் அமளி

தமிழ் முரசு  தமிழ் முரசு
சபரிமலையில் கெடுபிடிகளை தளர்த்த கோரி கேரள சட்டசபையில் கடும் அமளி

திருவனந்தபுரம்: கேரள சட்டசபையில் சபரிமலை விவகாரத்தால் இன்றும் கடும் அமளி ஏற்பட்டது. கேள்வி நேரத்தை எதிர்கட்சியினர் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சபரிமலையில் 144 தடை உத்தரவு, போலீஸ் கெடுபிடிகள் ஆகியவற்றை தளர்த்த கோரி காங்கிரஸ் கூட்டணி கட்சியை சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சட்டசபை வளாகத்தில் தொடர் சத்யாகிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்துக்கு தீர்வு காண்பதற்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி எதிர் கட்சியினர் சட்டசபையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் கடந்த 10 நாட்களுக்கு மேலாக சட்டசபை தினமும் கூடிய சிறிது ரேநத்தில் ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று இந்த விவகாரம் தொடர்பாக எதிர் கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் இருக்கை முன்பு பேனர்களை வைத்து கோஷமிட்டனர்.

தொடர்ந்து கேள்வி நேரத்தை புறக்கணித்து அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.   பின்னர் சட்டசபை வளாகத்தில் போராட்டம் நடத்தும் எம்எல்ஏக்களுக்கு ஆதரவாக எதிர்கட்சியினர் அனைவரும் சட்டசபையின் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

சிறிது நேரத்துக்கு பிறகு அவர்கள் மீண்டும் சபை நடவடிக்கையில் கலந்துகொண்டனர்.

.

மூலக்கதை