இலங்கை பார்லிமென்ட் கலைப்பு செல்லாது: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

தினமலர்  தினமலர்
இலங்கை பார்லிமென்ட் கலைப்பு செல்லாது: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

கொழும்பு: இலங்கை பார்லிமென்ட்டை கலைத்தது செல்லாது ; அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இடைக்கால தடை

இலங்கையில், 2015ல் நடந்த அதிபர் தேர்தலின் போது, யு.பி.எப்.ஏ., எனப்படும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி வேட்பாளரான மைத்ரிபால சிறிசேனவுக்கு, ரணில் விக்கிரம சிங்கேவின், யு.என்.பி., எனப்படும், ஐக்கிய தேசிய கட்சி ஆதரவு அளித்தது.தேர்தலில் வெற்றி பெற்ற சிறிசேன, அதிபராகவும், ரணில், பிரதமராகவும் பதவியேற்றனர். ரணிலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை தொடர்ந்து, யு.என்.பி., உடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாகவும், பிரதமர் பதவியில் இருந்து ரணிலை நீக்கி, புதிய பிரதமராக, ராஜபக்சேவை நியமிப்பதாகவும், அதிபர் சிறிசேன அறிவித்தார். ஆனால், ராஜபக்சேவுக்கு போதிய, எம்.பி.,க்கள் பலம் இல்லாததை அடுத்து, பார்லியை கலைப்பதாக, சிறிசேன, சமீபத்தில் அறிவித்தார். இதனை எதிர்த்து இலங்கை சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த கோர்ட், பார்லிமென்ட் கலைப்புக்கு இடைக்கால தடை விதித்திருந்தது.

சட்ட விரோதம்

விசாரணை முடிந்த நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய 7 நீதிபதிகள் கொண்டு அமர்வு, பார்லிமென்ட் கலைக்கப்பட்டது செல்லது. அதிபரின் உத்தரவு அரசியல் சாசனத்திற்கு எதிரானது. பார்லிமென்ட்டை கலைக்க மூன்றில் 2 பங்கு எம்.பி.,க்களின் ஆதரவு தேவை எக்கூறியது.

மூலக்கதை