உள்ளூர் போட்டிகளில் விளையாடி டோனி திறமையை நிரூபிக்க வேண்டும்: மொகிந்தர் அமர்நாத் வலியுறுத்தல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
உள்ளூர் போட்டிகளில் விளையாடி டோனி திறமையை நிரூபிக்க வேண்டும்: மொகிந்தர் அமர்நாத் வலியுறுத்தல்

புதுடெல்லி:  உள்ளூர் போட்டிகளில் விளையாடி டோனி தனது திறமையை நிரூபிக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் மொகிந்தர் அமர்நாத் வலியுறுத்தியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் மகேந்திர சிங் டோனி.

கூல் கேப்டன் என்று அழைக்கப்பட்ட இவர், இந்திய அணிக்காக பல வெற்றிகளை பெற்றுத்தந்துள்ளார். பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான டோனி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றபின் ஒருநாள், டி-20 போட்டிகளில் விளையாடி வருகிறார்.

சமீபகாலமாக டோனி சிறப்பாக விளையாடவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. பார்மில் இல்லாத காரணத்தால் அவருக்கு தற்போது டி20 அணியில் இடம் கிடைக்கவில்லை.

இந்நிலையில், ஒருநாள் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை டோனி வெளிப்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அடுத்தாண்டு நடைபெறும் உலக கோப்பை போட்டிக்கான அணியில் இடம்பிடிக்க வேண்டுமெனில் டோனி தனது திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

 

இந்நிலையில், 1983ம் ஆண்டில் நடந்த உலக கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருது பெற்றவரும், இந்திய அணியின் சிறந்த ஆல்ரவுண்டராக விளங்கியவரும், வீரர்கள் தேர்வாளருமான மொகிந்தர் அமர்நாத், உள்ளூர் போட்டிகளில் விளையாடி தோனி தனது திறமையை நிரூபிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘இந்திய அணியில் இடம்பெற விரும்பும் வீரர்கள், மாநில அணிக்காக விளையாட வேண்டும்.

அப்போதுதான் அந்த வீரரின் திறனை கணிக்க முடியும்.   கடந்த காலங்களில் பெரிய சாதனைகளை படைத்திருந்தாலும், அதை வைத்துக்கொண்டே காலம் முழுக்க விளையாட முடியாது.   வீரர் தற்போது என்ன பார்மில் இருக்கிறார் என்பது அவசியம். மூத்த வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாட ஆர்வம் காட்டுவதில்லை.

இதுகுறித்த கொள்கைகளை பிசிசிஐ முற்றிலும் மாற்ற வேண்டும்.

உள்ளூர் போட்டிகளில் விளையாடி மகேந்திரசிங் டோனி தனது திறமையை நிரூபிக்க வேண்டும்’’ என்றார்.

.

மூலக்கதை