தெலங்கானா முதல்வராக சந்திரசேகர ராவ் இன்று பதவியேற்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
தெலங்கானா முதல்வராக சந்திரசேகர ராவ் இன்று பதவியேற்பு

ஐதராபாத்: தெலங்கானா மாநில முதல்வராக சந்திரசேகர ராவ் இன்று பதவியேற்றார். தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (டிஆர்எஸ்) கட்சி அமோக வெற்றிபெற்றது.

மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 88 இடங்களில் டிஆர்எஸ் கட்சியும், காங்கிரஸ் 21 இடங்களிலும் வெற்றிபெற்றன.   அமோக வெற்றிபெற்ற டிஆர்எஸ் ஆட்சியை தக்க வைத்தது. இந்நிலையில், அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில், சட்டப்பேரவை தலைவராக சந்திரசேகர் ராவ்  ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், சந்திரசேகர ராவ் முதல்வராக 2வது முறையாக இன்று பதவியேற்றார்.

ராஜ்பவனில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

.

மூலக்கதை