கேரளாவில் ஆட்டோ, டாக்சி கட்டண உயர்வு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கேரளாவில் ஆட்டோ, டாக்சி கட்டண உயர்வு

திருவனந்தபுரம்: கேரளாவில் ஆட்டோ, டாக்சி கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது. கேரளாவில் ஆட்டோ, டாக்சி கட்டணத்தை உயர்த்த சமீபத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி ஆட்டோக்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் 1. 5 கி. மீ. க்கு ரூ. 20ல் இருந்து ரூ. 25 ஆகவும், டாக்சிகளுக்கு குறைந்தபட்ச கட்டணம் 5 கி. மீ. க்கு ரூ. 150ல் இருந்து ரூ. 175 ஆகவும் உயர்த்தப்பட்டது. ஆட்டோவுக்கு முதல் 1. 5 கி. மீ. க்கு மேல் ஒவ்வொரு கி. மீ. க்கும் ரூ. 10ல் இருந்து ரூ. 13 ஆகவும், டாக்சிக்கு முதல் 5 கி. மீ. க்கு மேல் ஒவ்வொரு கி. மீ. க்கும் ரூ. 15ல் இருந்து ரூ. 17 ஆகவும் உயர்த்தப்பட்டது.

இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது.

.

மூலக்கதை