சில்லரை விலை பணவீக்கம் வீழ்ச்சி 16 மாதங்களில் இல்லாத வகையில், 2.33 சதவீதமாக சரிவு

தினமலர்  தினமலர்
சில்லரை விலை பணவீக்கம் வீழ்ச்சி 16 மாதங்களில் இல்லாத வகையில், 2.33 சதவீதமாக சரிவு

புதுடில்லி:கடந்த நவம்பரில், நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், 16 மாதங்களில் இல்லாத வகையில், 2.33 சதவீதமாக சரிவடைந்துள்ளது.


கச்சா எண்ணெய், உணவுப் பொருட்கள் ஆகியவற்றின் விலை சரிவால், சில்லரை விலை பணவீக்கம் வீழ்ச்சி கண்டுள்ளது.ரிசர்வ் வங்கி, அடுத்த நிதியாண்டின், முதல் காலாண்டில், சில்லரை பணவீக்க இலக்கை, 4.8 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கிற்குள், தொடர்ந்து நான்கு மாதங்களாக, சில்லரை பணவீக்கம் உள்ளது.சில்லரை பணவீக்கம், 2017, ஜூலையில்,2.60 சதவீதமாக இருந்தது. அதன் பின், கடந்த, நவம்பரில் தான், இந்த அளவிற்கு நெருக்கமாக குறைந்துள்ளது.


இது குறித்து, மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த நவம்பரில், காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் விலை, குறைந்து இருந்தது. அதனால், அம்மாதத்தில், சில்லரை விலை பணவீக்கம், 2.33 சதவீதமாக சரிவடைந்துள்ளது.இது, அக்டோபரில், 3.31 சதவீதம்; 2017, நவம்பரில், 3.58 சதவீதமாக இருந்தது.நவம்பரில், காய்கறிகள் பணவீக்கம், மைனஸ், 15.5 சதவீதமாக குறைந்துள்ளது. இது, அக்டோபரில், மைனஸ், 8.06 சதவீதமாக இருந்தது.


கடந்த மாதம், உணவுப் பொருட்கள் பணவீக்கம், மைனஸ், 2.61 சதவீதமாக உள்ளது. இது, அக்டோபரில், மைனஸ், 0.86 சதவீதமாக காணப்பட்டது.எரிபொருள் மற்றும் மின்சாரத்தின் சில்லரை பணவீக்கம், 7.39 சதவீதமாக குறைந்துள்ளது. இது, முந்தைய மாதத்தில், 8.55 சதவீதமாக இருந்தது.இதே காலத்தில், நகர்ப்புற சில்லரை பணவீக்கம், 3.97 சதவீதத்தில் இருந்து, 3.12 சதவீதமாக குறைந்துள்ளது.கிராமப்புற சில்லரை பணவீக்கம், 3.34 சதவீதத்தில் இருந்து, 1.71 சதவீதமாக சரிவடைந்துள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது


தொழில் துறை உற்பத்தி உயர்வுநாட்டின் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, 11 மாதங்களில் இல்லாத அளவிற்கு, அக்டோபரில், 8.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.இது, செப்டம்பரில், 4.5 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு அக்டோபரில், 8.5 சதவீதமாக இருந்தது.தொழில் துறையில், 77 சதவீத பங்களிப்பை வழங்கும், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி, அக்டோபரில், 7.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, செப்டம்பரில், 4.6 சதவீதமாக இருந்தது.பொறியியல் சாதனங்கள் துறையின் உற்பத்தி வளர்ச்சி, 16..8 சதவீதமாக உயர்ந்துள்ளது.


நுகர்வோர் சாதனங்கள் துறையின் உற்பத்தி வளர்ச்சி, 17.6 சதவீதமாக அதிகரித்துள்ளதுஇதே காலத்தில் மின் துறை உற்பத்தி, 8.2 லிருந்து, 10.8 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது.சுரங்கத் துறையின் உற்பத்தி வளர்ச்சி, மைனஸ், 0.2 சதவீதத்தில் இருந்து, 7 சதவீதமாக அதிகரித்து உள்ளது. இடைநிலைப் பொருட்கள் துறையின் உற்பத்தி வளர்ச்சி, 1.4 சதவீதத்தில் இருந்து, 1.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.நடப்பு நிதியாண்டில், ஏப்., – அக்., வரையிலான காலத்தில், தொழில் துறை உற்பத்தி, 5.6 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்தி நிதியாண்டின் இதே காலத்தில், 2.5 சதவீதமாக இருந்தது. Advertisement Share   Share   Share   Share   உலக முதலீட்டாளர்கள் மாநாடு 4 மாவட்டங்கள் முன்னிலை டிசம்பர் 12,2018 தமிழகத்தில், 2019ல் நடக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு, நான்கு மாவட்டங்கள் மட்டுமே, இலக்கை எட்டுவதில் ... மேலும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 4 மாவட்டங்கள் முன்னிலை டிசம்பர் 12,2018 தமிழகத்தில், 2019ல் நடக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு, நான்கு மாவட்டங்கள் மட்டுமே, இலக்கை எட்டுவதில் ... மேலும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 4 மாவட்டங்கள் முன்னிலை டிசம்பர் 12,2018 தமிழகத்தில், 2019ல் நடக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு, நான்கு மாவட்டங்கள் மட்டுமே, இலக்கை எட்டுவதில் ... மேலும் ‘ஜி.எஸ்.டி.,யை ரத்து செய்ய முடியாது’ டிசம்பர் 12,2018 புதுடில்லி:‘‘கடந்த எட்டு மாதங்களில், ஜி.எஸ்.டி.,யில், 12 ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு ... மேலும் ‘ஜி.எஸ்.டி.,யை ரத்து செய்ய முடியாது’ டிசம்பர் 12,2018 புதுடில்லி:‘‘கடந்த எட்டு மாதங்களில், ஜி.எஸ்.டி.,யில், 12 ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு ... மேலும் ‘ஜி.எஸ்.டி.,யை ரத்து செய்ய முடியாது’ டிசம்பர் 12,2018 புதுடில்லி:‘‘கடந்த எட்டு மாதங்களில், ஜி.எஸ்.டி.,யில், 12 ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு ... மேலும் ‘அம்மா’ மினரல் வாட்டர் பாட்டில் பருவ நிலையால் விற்பனை சரிவு டிசம்பர் 12,2018 சேலம்:தமிழகத்தில் ஏற்பட்டுஉள்ள பருவ நிலை மாற்றத்தால், ‘அம்மா’ மினரல் வாட்டர் பாட்டில் விற்பனை ... மேலும் ‘அம்மா’ மினரல் வாட்டர் பாட்டில் பருவ நிலையால் விற்பனை சரிவு டிசம்பர் 12,2018 சேலம்:தமிழகத்தில் ஏற்பட்டுஉள்ள பருவ நிலை மாற்றத்தால், ‘அம்மா’ மினரல் வாட்டர் பாட்டில் விற்பனை ... மேலும் ‘அம்மா’ மினரல் வாட்டர் பாட்டில் பருவ நிலையால் விற்பனை சரிவு டிசம்பர் 12,2018 சேலம்:தமிழகத்தில் ஏற்பட்டுஉள்ள பருவ நிலை மாற்றத்தால், ‘அம்மா’ மினரல் வாட்டர் பாட்டில் விற்பனை ... மேலும் பிரதமரின் பொருளாதார ஆலோசகர் ராஜினாமா டிசம்பர் 12,2018 புதுடில்லி:பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினர் பதவியில் இருந்து, சுர்ஜித் பல்லா ராஜினாமா ... மேலும் பிரதமரின் பொருளாதார ஆலோசகர் ராஜினாமா டிசம்பர் 12,2018 புதுடில்லி:பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினர் பதவியில் இருந்து, சுர்ஜித் பல்லா ராஜினாமா ... மேலும் பிரதமரின் பொருளாதார ஆலோசகர் ராஜினாமா டிசம்பர் 12,2018 புதுடில்லி:பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினர் பதவியில் இருந்து, சுர்ஜித் பல்லா ராஜினாமா ... மேலும் உலக தேயிலை உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 25 4தவீதம் டிசம்பர் 12,2018 ‘உலக அளவில் நடைபெறும் தேயிலை உற்பத்தியில், 25 சதவீத பங்களிப்புடன், இரண்டாவது மிகப் பெரிய தேயிலை உற்பத்தியாளராக ... மேலும் உலக தேயிலை உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 25 4தவீதம் டிசம்பர் 12,2018 ‘உலக அளவில் நடைபெறும் தேயிலை உற்பத்தியில், 25 சதவீத பங்களிப்புடன், இரண்டாவது மிகப் பெரிய தேயிலை உற்பத்தியாளராக ... மேலும் உலக தேயிலை உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 25 4தவீதம் டிசம்பர் 12,2018 ‘உலக அளவில் நடைபெறும் தேயிலை உற்பத்தியில், 25 சதவீத பங்களிப்புடன், இரண்டாவது மிகப் பெரிய தேயிலை உற்பத்தியாளராக ... மேலும்   தினமலர் முதல் பக்கம் வர்த்தகம் முதல் பக்கம் » Dinamalar - World's No 1 Tamil News Website Dinamalar - World's No 1 Tamil News WebsiteDinamalar - World's No 1 Tamil News Website

மூலக்கதை