பிரெக்சிட் மசோதா: நம்பிக்கை வாக்கெடுப்பில் தெரசா மே வெற்றி

தினமலர்  தினமலர்
பிரெக்சிட் மசோதா: நம்பிக்கை வாக்கெடுப்பில் தெரசா மே வெற்றி


லண்டன்: ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் இருந்து, பிரிட்டன் வெளியேறுவதற்கான, 'பிரெக்சிட்' மசோதா அந்நாட்டு பார்லிமென்ட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற பிரிட்டன் திட்டமிட்டது. இதையடுத்து நாட்டு மக்களிடம் நடத்தப்பட்ட கருத்து கேட்கும் ஓட்டெடுப்பிலும், வெளியேறுவதற்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை, பிரிட்டன் பிரதமர் தெரசா மே, மேற்கொண்டார். அதன் முதல்கட்டமாக, இதற்காக பார்லிமென்ட்டின் ஒப்புதல் பெறுவதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது.இந்நிலையில் பிரெக்சிட் மசோதா மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தது. இதில் கன்சர்வேட்டிவ் கட்சி 200 எம்.பி.க்கள் தெரசா மேவுக்கு ஆதரவாகவும், 117 பேர் எதிராகவும் ஒட்டளித்தனர்.

மூலக்கதை