மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியமைக்க உரிமை கோராது: சிவராஜ் சிங் சவுகான் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியமைக்க உரிமை கோராது: சிவராஜ் சிங் சவுகான் அறிவிப்பு

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சியமைக்க உரிமை கோராது என சிவராஜ் சிங் சவுகான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 114 இடங்களில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ், ஆட்சி அமைக்க ஆதரவு தருவதாக 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ள பகுஜன் சமாஜ் கட்சி அறிவித்துள்ளது. இதன்மூலம் பெரும்பான்மைக்கு தேவையான 116 இடங்களை காங்கிரஸ் பெற்றுள்ளது. இதன் காரணமாக காங்கிரஸை ஆட்சி அமைக்க வருமாறு ம.பி. கவர்னர் ஆனந்தி பென் பட்டேல் அழைப்பு விடுத்துள்ளார். இதற்கிடையில் ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ள சமாஜ்வாதி கட்சியும் காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது. இதனால் காங்கிரசுக்கு பலம் கூடிக்கொண்டே போகிறது. இந்நிலையில் ம.பி.யின் தற்போதைய முதல்வராக உள்ள சிவராஜ் சிங் சவுகான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ம.பி.யில் அதிக ஓட்டுக்களை பெற்றிருந்தாலும், அதிக இடங்களை கைப்பற்ற முடியவில்லை. தோல்வியை ஏற்றுக் கொள்கிறோம். ம.பி.யில் பாஜக ஆட்சியமைக்க உரிமை கோராது. எனது ராஜினாமா கடிதத்தை கவர்னரை சந்திக்க அளித்துள்ளேன் என தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்காக உழைத்த அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். இதேபோன்று பாஜகவுக்கு பெருவாரியான வாக்களித்த மக்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

மூலக்கதை