டிரம்பை நீக்க அமெரிக்க பார்லி.யில் கண்டன தீர்மானம்?

தினமலர்  தினமலர்
டிரம்பை நீக்க அமெரிக்க பார்லி.யில் கண்டன தீர்மானம்?

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்க முன்னர் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ், மற்றும் பிளேபாய் பத்திரிக்கை மாடல் கேரன் மெக்துஹால்l ஆகிய இரு பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், விஷயம் வெளியே தெரியாமலிருக்க பெருந்தொகை கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதை ட்ரம்பின் முன்னாள் வழக்கறிஞர் மைக்கேல் கோஹென் ஒப்புக்கொண்டார்.இதையடுத்து அதிபர் டிரம்ப் மீது அமெரிக்க பார்லிமென்டில் கண்டனத் தீர்மானம் கொண்டுவரப்பட வாய்ப்புள்ளதாகவும். இதுபற்றி அதிபர் டிரம்ப் கவலை அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது

மூலக்கதை