மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு: மாயாவதி அறிவிப்பு

தினகரன்  தினகரன்
மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு: மாயாவதி அறிவிப்பு

மத்தியபிரதேசம்:  மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு தருவதாக மாயாவதி கூறியுள்ளார். பாஜக மீதான அதிருப்தியின் காரணமாகவே மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்துள்ளனர் என பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கூறியுள்ளார். மேலும் மத்தியபிரதேசத்தில் 114 இடங்களில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் ஆட்சியமைக்க மேலும் 2 இடங்கள் தேவை என்றும் தேவைப்பட்டால் ராஜஸ்தானிலும் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்க தயார் என்று அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை