தெலுங்கானா முதல்வராக நாளை பதவியேற்கிறார் சந்திரசேகர ராவ்

தினகரன்  தினகரன்
தெலுங்கானா முதல்வராக நாளை பதவியேற்கிறார் சந்திரசேகர ராவ்

ஐதராபாத் : தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ், அம்மாநிலத்தின் முதல்வராக 2வது முறையாக நாளை பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடந்து முடிந்த தெலுங்கானா சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் மொத்தமுள்ள 119 இடங்களில் சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி 88 இடங்களில் வெற்றி பெற்றது. இதனையடுத்து சந்திரசேகர ராவ் நாளை முதல்வராக பதவியேற்றுக் கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் பதவியேற்கும் நேரம், இடம் உள்ளிட்டவைகள் குறித்து தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.தெலுங்கானாவின் கஜ்வெல் தொகுதியில் போட்டியிட்ட டிஆர்எஸ் தலைவர் சந்திரசேகர் ராவ் 51 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். முன்கூட்டியே சட்டமன்றத்தை கலைத்து சந்திரசேகர ராவ் இந்தத் தேர்தல் போட்டியிட்டது மிகவும் சவாலானதாக பார்க்கப்பட்டது. அதேபோல் கடந்த தேர்தலை காட்டிலும் தற்போது கூடுதல் இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் டிஆர்எஸ் கட்சி ஆட்சி அமைக்கிறது. இந்நிலையில் தெலுங்கானா முதல்வராக சந்திரசேகர ராவ்  நாளை பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை