ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வர் யார்?..... இன்று அறிவிக்கிறது காங்கிரஸ்

தினகரன்  தினகரன்
ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வர் யார்?..... இன்று அறிவிக்கிறது காங்கிரஸ்

ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து இன்று அறிவிக்கப்படும் என காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  நடந்து முடிந்த ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 200 இடங்களில் காங்கிரஸ் 100 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. காங்கிரஸ் சார்பில் சச்சின் பைலட் மற்றும் அசோக் கெலாட் ஆகியோர் முதல்வர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் காங்கிரஸ் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளதால் முதல்வர் யார் என்பதை முடிவு செய்ய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று இரவு அசோக் கெலாட் இல்லத்தில் கூடியது. இதில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை. இதனையடுத்து புதிதாக தேர்வாகி உள்ள எம்.எல்.ஏ.க்களை கூட்டி இன்று காலை 11 மணிக்கு ஆலோசிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இந்த கூட்டத்தில் முதல்வர் யார் என்பது முடிவு செய்யப்பட்டு, கூட்டத்திற்கு பிறகு முதல்வர் யார் என்பதை அறிவிக்க உள்ளதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை