மத்திய பிரதேச தேர்தல் முடிவுகள் வெளியீடு...... 114 இடங்களை கைப்பற்றியது காங்கிரஸ்

தினகரன்  தினகரன்
மத்திய பிரதேச தேர்தல் முடிவுகள் வெளியீடு...... 114 இடங்களை கைப்பற்றியது காங்கிரஸ்

போபால்: மத்திய பிரதேச மாநிலத்திற்கான தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களை கைப்பற்றியுள்ளது. ஆட்சியமைக்க 116 இடங்கள் தேவை என்ற நிலையில் 114 இடங்களை மட்டுமே காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளது. பெரும்பான்மைக்கு இன்னும் 2 இடங்கள் மட்டுமே தேவைப்படும் நிலையில் பிற கட்சிகள், சுயேட்சைகள் ஆதரவுடன் ஆட்சியமைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. பாஜக 109 இடங்களிலும், பகுஜன் சமாஜ் 2 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி 1 இடங்களிலும், சுயேட்சைகள் 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. மத்தியப் பிரதேசத்தில் 230 தொகுதிகளில் 75 சதவீத வாக்குகள் பதிவாகின. மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் கடந்த 2003ம் ஆண்டிலிருந்து பாஜ தொடர்ந்து ஆட்சியை நடத்தி வந்தது. எனினும், தற்போது நடைபெற்ற தேர்தலில் பாஜக-காங்கிரஸ் இடையே இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில் தற்போது தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதில் காங்கிரஸ் 114 இடங்களை கைப்பற்றியுள்ளது. பெரும்பான்மைக்கு இன்னும் 2 இடங்கள் மட்டுமே தேவைப்படும் நிலையில் பிற கட்சிகள், சுயேட்சைகள் ஆதரவுடன் ஆட்சியமைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

மூலக்கதை