ஐஃபோனின் சில மாடல்களை விற்பனை செய்ய சீனா நீதிமன்றம் தடை

தினகரன்  தினகரன்
ஐஃபோனின் சில மாடல்களை விற்பனை செய்ய சீனா நீதிமன்றம் தடை

சீனா: பிரபல செல்போன் நிறுவனமான ஆப்பிள் ஐஃபோனின் சில பழைய மாடல்களை சீனாவில் விற்பனை செய்வதற்கு அந்நாட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.குவால்காம் நிறுவனத்திற்கும் ஆப்பிள் நிறுவனத்திற்கும் இடையே காப்புரிமை தொடர்பான சர்ச்சைகள் உள்ளன. தங்கள் நிறுவனத்தின் இரண்டு காப்புரிமைகளை ஆப்பிள் நிறுவனம் மீறிவிட்டதாக குவால்காம் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த ஃபியூஜியன் மாகாணத்தில் உள்ள ஃபூசூ நீதிமன்றம், சீனாவில் பழைய மாடல் ஆப்பிள் ஐஃபோன்களை விற்பனை செய்ய தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.இந்த உத்தரவால் ஐஃபோன் மாடல்களில் iPhone 6S, iPhone 7 Plus, iPhone X உள்ளிட்டவற்றின் விற்பனை பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. இருப்பினும் மேல்முறையீட்டுக்குச் செல்ல இருப்பதால் விற்பனை பாதிக்கப்படாது என ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை