தமிழக சுற்றுலா துறைக்கு ஆசிய மேம்பாட்டு வங்கி, 217 கோடி ரூபாய் கடன்

தினமலர்  தினமலர்
தமிழக சுற்றுலா துறைக்கு ஆசிய மேம்பாட்டு வங்கி, 217 கோடி ரூபாய் கடன்

புதுடில்லி:தமிழக சுற்றுலாத் துறை வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்புக்கும் உதவ, ஆசிய மேம்பாட்டு வங்கி, 217 கோடி ரூபாய் கடன் வழங்குகிறது.


இது குறித்து, மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழகம், பஞ்சாப், இமாச்சல பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில், 1,750 கோடி ரூபாய் செலவில், சுற்றுலாத் துறை மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்த, அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், இயற்கை மற்றும் கலாசார பாரம்பரிய நினைவிடங்களில், சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.


அதன்படி, தமிழகத்தில், 8 பாரம்பரிய நினைவிடங்கள், ஒரு அருங்காட்சியகம், 3 கோவில்கள், ஒரு குளம் ஆகியவற்றின், மராமத்து மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அப்பகுதியில் சூரிய மின்சக்தியில் இயங்கும் தகவல் மையங்கள், ஓய்வகங்கள், குளியல் மற்றும் கழிப்பறை வசதிகள் ஆகியவை அமைக்கப்படும்.


இத்திட்டத்தின் மொத்த செலவு, 308 கோடி ருபாய். அதில், மத்திய அரசு,ரூ. 91 கோடிவழங்கும். ஆசிய மேம்பாட்டு வங்கி, 217 கோடி ரூபாய் கடனுதவி அளிக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை