உலக தேயிலை உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 25 4தவீதம்

தினமலர்  தினமலர்
உலக தேயிலை உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 25 4தவீதம்

‘உலக அளவில் நடைபெறும் தேயிலை உற்பத்தியில், 25 சதவீத பங்களிப்புடன், இரண்டாவது மிகப் பெரிய தேயிலை உற்பத்தியாளராக இந்தியா உள்ளது’ என, மத்திய வணிக துறை தெரிவித்துள்ளது.


மத்திய வணிக துறை, ‘டுவிட்டர்’ பக்கத்தில் பதிவு செய்த விபரம்:உலக அளவில் நடைபெறும் தேயிலை உற்பத்தியில், இந்தியா, 25 சதவீதம் பங்களிப்பு ஆகும். மேலும், இரண்டாவது மிகப் பெரிய தேயிலை உற்பத்தியாளராகவும் உள்ளது. உலக அளவில் நான்காவது ஏற்றுமதியாளராகவும், இந்தியா உள்ளது.இதில், 2015 – 16ல், 4,467 கோடி ரூபாய்க்கும், 2016 – 17ல், 4,602 கோடி ரூபாய்க்கும், 2017 – 18ல் 5,059 கோடி ரூபாய்க்கும் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.


இதே போன்று, உலக அளவில் செய்யப்படும் காபி உற்பத்தியில், இந்தியா, 4 சதவீதம் பங்களிப்பை வழங்குகிறது. மேலும், காபியில் ஐந்தாவது மிகப்பெரிய ஏற்றுமதியாளராக இந்தியா உள்ளது.கடந்த, 2015 – 16ல், 3,450 கோடி ரூபாய்க்கும், 2016 – 17ல், ரூ.3,736 கோடிக்கும், 2017 – 18ல் 4,184 கோடி ரூபாய்க்கும் காபி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.2017 – 18ல், இத்தாலி, ஜெர்மனி, பெல்ஜியம் ஆகிய நாடுகள், மிக முக்கிய இறக்குமதி யாளராவர்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

– நமது நிருபர் –

மூலக்கதை