மல்லையாவை 'கடத்த' அனுமதி : லண்டன் நீதிமன்றம் உத்தரவு

தினமலர்  தினமலர்
மல்லையாவை கடத்த அனுமதி : லண்டன் நீதிமன்றம் உத்தரவு

லண்டன்: வங்கிக் கடன் மோசடி தொடர்பாக, பிரிட்டனுக்கு தப்பியோடிய தொழில் அதிபர் விஜய் மல்லையாவை, 62, இந்தியாவுக்குநாடுகடத்துவதற்கு அனுமதி அளித்து லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.பல்வேறு வங்கிகளில், 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்த விஜய் மல்லையா 2016ல் லண்டனுக்கு தப்பி சென்றார். அவரை நாடு கடத்தக் கோரி பிரிட்டன் அரசுக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்தது.அதன்படி மல்லையாவுக்கு எதிராக லண்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பிரிட்டன் அரசு வழக்கு தொடர்ந்தது. ஓராண்டாக நடந்து வந்த இந்த வழக்கில் லண்டனில் உள்ளவெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி எம்மா ஆர்பத்னாட் நேற்று அளித்த தீர்ப்பு:மல்லையா மீது பொய்யான எந்தக் குற்றச்சாட்டும் கூறப்படவில்லை என்பது உறுதியாகி உள்ளது. தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்களின்படி, இந்த வழக்கில் பதில் சொல்லியாக வேண்டிய நிலையில் அவர் உள்ளார். அதனால் அவரை நாடுக் கடத்த உத்தரவிடப்படுகிறது. மல்லையா அடைக்கப்பட உள்ள மும்பை ஆர்தர் சாலை சிறையில் பாதுகாப்பு இல்லை என கூறு வதை ஏற்க முடியாது.தேவைப்பட்டால் அவரது நோய்களுக்கு தனிப்பட்ட முறையில் சிகிச்சை எடுத்துக் கொள்ள அனுமதிக்கலாம்.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.இந்த தீர்ப்பு குறித்து பிரிட்டன் அரசுக்கு நீதிமன்றம் அறிக்கை அனுப்பி வைத்துள்ளது.இந்த தீர்ப்பை எதிர்த்து 14 நாட்களுக்குள் பிரிட்டன் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய மல்லையாவுக்கு வாய்ப்பு உள்ளது.அவ்வாறு மேல்முறையீடு செய்யாத பட்சத்தில் மல்லையாவை நாடு கடத்துவது குறித்து 28 நாட்களுக்குள் தன் முடிவை அரசு அறிவிக்க வேண்டும்.இந்தத் தீர்ப்பை வரவேற்பதாக, சி.பி.ஐ., தெரிவித்துள்ளது.சிறந்த நாள்!இந்தியாவுக்கு இது சிறந்த நாள். லண்டன் நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறேன். காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐ.மு., கூட்டணி ஆட்சியின்போது மோசடி செய்தவர்கள் தற்போது வசமாக சிக்குகின்றனர். தவறு செய்தவர்களை பா.ஜ., அரசு தப்ப விடாது.அருண் ஜெட்லி'நான் திருடவில்லை'நீதிமன்றத்திற்கு வந்த மல்லையா கூறியதாவது:நான் பணத்தை திருடவில்லை. 'வங்கிகளிடம் வாங்கியக் கடனில் அசலை முழுவதுமாக செலுத்தத் தயார்' என நான் கூறியது பொய் இல்லை. அனைத்துக் கடன்களையும் அடைக்கும் அளவுக்கு எனக்கு சொத்துக்கள் உள்ளன. நாடு கடத்தல் தொடர்பான இந்த வழக்குக்கும் கடனை செலுத்துவதாக நான் கூறியதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை