வைர விமானம் உண்மையா? : எமிரேட்ஸ் விளக்கம்

தினமலர்  தினமலர்
வைர விமானம் உண்மையா? : எமிரேட்ஸ் விளக்கம்

அபுதாபி: சில நாட்களுக்கு முன் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் வெளிப்புறம் முழுவதும் வைரங்களால் ஜொலிக்கும் படத்தை அந்நிறுவனம் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தது. இது இணையத்தில் பரவி ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இது எப்படி என்று எமிரேட்ஸ் விமான நிறுவனம் விளக்கமளித்துள்ளது.கிறிஸ்டல் கற்களை உருவாக்கும் கலைஞரான சாரா ஷகீல் என்பவர் சாதாரண பொருட்களை கிறிஸ்டல் கற்களுடன் சேர்த்து உருவாக்கி, சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். இந்நிலையில் எமிரேட்ஸ் விமானத்தின் புகைப்படத்தில் முற்றிலும் வைரங்களால் நிறைத்தது போல எடிட் செய்து அதை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். இதைக் கண்ட எமிரேட்ஸ் நிறுவனம், சாரா ஷகீல் அனுமதியுடன் விமானத்தின் படத்தை தங்கள் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது. இதுதான் பார்த்தவர்களை அசரவைத்தது.தற்போது இதுதொடர்பாக எமிரேட்ஸ் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், ''அது உண்மையான விமானம் அல்ல. சாரா ஷகீல் என்ற கலைஞரின் படத்தை அவரின் அனுமதியோடு பயன்படுத்தியுள்ளோம்'' எனத் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை