பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

தினமலர்  தினமலர்
பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

தேவதானப்பட்டி;தேவதானப்பட்டி சுற்றுப்பகுதி விவசாயிகள் 15 ஆண்டிற்குப்பின் பின் மீண்டும் பருத்தி சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பரப்பு அதிகரித்துள்ளது.இங்கு 15 ஆண்டுகளுக்கு முன் பருத்தி செடிகளில் புழுத் தாக்குதல் அதிகரித்து பாதிப்பு ஏற்பட்டது. அதன்பின் பருத்தியை தவிர்த்த விவசாயிகள் கரும்பு, வாழை, மக்காச்சோளம் போன்ற பயிர்கள் சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டினர்.இந்நிலையில் நடப்பு ஆண்டு ஜெயமங்கலம், பொம்மிநாயக்கன்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி, டி.வாடிப்பட்டி, குள்ளப்புரம், முதலக்கம்பட்டி, சங்கரமூர்த்திபட்டி, தேவதானப்பட்டி கிராமங்களில் ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
விதை நடவு செய்து 120 நாட்களுக்கு பிறகு பலன் கிடைக்கும். நோய் தாக்குதல் இல்லாமல் இருந்தால் தொடர்ந்து 3 மாதங்களுக்கு பலன் பெற லாம்.கோவில்புரம் விவசாயி கனகராஜ் கூறுகையில், ''பருத்தி சாகுபடிக்கு அதிக நீர் தேவையில்லை. நான்கு நாட்களுக்கு ஒரு முறை பாய்ச்சினால் போதும். ஒரு ஏக்கர் பரப்பள வில் விதை நடவு செய்து பலனுக்கு வரும் வரை ரூ.25 ஆயிரம் வரை செலவாகிறது.இப்பகுதியில் விளைகின்ற பருத்தி தேனி மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது. மக்காச்சோளத்தில் புழுதாக்குதல் அதிகரிப்பால் தற்போது பருத்தி சாகுபடியில் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர், என்றார்.

மூலக்கதை