கூடுதல் பொறுப்புவகிக்கும் இன்ஸ்பெக்டர்களுக்கு பணிச்சுமை! குற்றவழக்குகளை கண்டுபிடிப்பதில் தொய்வு

தினமலர்  தினமலர்
கூடுதல் பொறுப்புவகிக்கும் இன்ஸ்பெக்டர்களுக்கு பணிச்சுமை! குற்றவழக்குகளை கண்டுபிடிப்பதில் தொய்வு

மதுரை:மதுரை நகரில் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர்களுக்கு கூடுதல் பொறுப்பாக குற்றப்பிரிவும் ஒதுக்கப்படுவதால் அவர்களுக்கு பணிச்சுமை ஏற்படுகிறது. குற்றவழக்குகளை கண்டுபிடிப்பதிலும் தொய்வு ஏற்படுகிறது.நகரில் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவுக்கென தனித்தனி இன்ஸ்பெக்டர்கள் உள்ளனர்.
இரு பிரிவுகளிலும் பணிச்சுமை அதிகம். அவனியாபுரம் உள்ளிட்ட ஸ்டேஷன்களில் குற்றப்பிரிவுகளுக்கென இன்ஸ்பெக்டர்கள் இல்லை. இதனால் கூடுதல் பொறுப்பாக அந்த ஸ்டேஷன்களின் சட்டம் ஒழங்கு இன்ஸ்பெக்டர்களே கவனித்து வருகின்றனர்.ஆர்ப்பாட்டம், மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ச.ஒ., இன்ஸ்பெக்டரின் பணி முக்கியம். குற்றப்பிரிவையும் கூடுதலாக கவனிக்கும் இவர்கள், குற்றங்கள் நடந்தால் ஓரிரு நாட்கள் மட்டுமே கவனம் செலுத்த முடியும். அதற்குள் சட்டம் ஒழுங்கு பிரச்னை வந்தால் அதற்கு அவர் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருக்கும். இதனால் குற்ற வழக்குகளை கண்டுபிடிப்பதில் பின்னடைவு ஏற்படும். குற்றப்பிரிவுக்களுக்கென இன்ஸ்பெக்டர்களை நியமிக்க கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மூலக்கதை