ஒரு காலத்தில் ராணியாக வாழ்ந்தவர் மகனால் வீட்டில் வைத்து பூட்டப்பட்ட 75 வயது மூதாட்டி பட்டினியால் சாவு

தினகரன்  தினகரன்
ஒரு காலத்தில் ராணியாக வாழ்ந்தவர் மகனால் வீட்டில் வைத்து பூட்டப்பட்ட 75 வயது மூதாட்டி பட்டினியால் சாவு

லக்னோ: உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவின் ஆலம்பாக் பகுதியைச் சேர்ந்த ரயில்வே ஊழியர் சலீல் சவுத்ரி. டிக்கெட் பரிசோதகராக பணியாற்றுகிறார். ரயில்வே குடியிருப்பில், தனது தாய் லீலாவதியுடன் (75) வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால், அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், சவுத்ரியின் வீட்டில் பூட்டை உடைத்து பார்த்தபோது லீலா இறந்துகிடந்தார். உடல் அழுக ஆரம்பித்திருந்தது.அக்கம்பக்கத்தினரிடம் போலீசார் விசாரித்தபோது, ‘சவுத்ரி அடிக்கடி கோபித்துக் கொண்டு வீட்டைவிட்டு சென்றுவிடுவார். பின்னர் திரும்பி வருவார். இம்முறை திரும்பி வராததால் அவர் பட்டினியால் இறந்திருக்கலாம்’ என்று தெரிவித்தனர். இதற்கிடையே, சவுத்ரி 2 மாதமாக வேலைக்கே செல்லாதது தெரியவந்தது. மேலும், அவர் எங்கிருக்கிறார் எ்ன்றே தெரியவில்லை. விசாரணையில் கிடைத்த இன்னொரு தகவல், லீலாவதியின் கணவர் உபி முன்னாள் எம்எல்சி (மேலவை உறுப்பினர்) ராம்கேர் சிங் என்று தெரியவந்துள்ளது. ஒரு காலத்தில் லக்னோவில் புகழ்பெற்ற குடும்பமாக இவர்களது குடும்பம் இருந்துள்ளது.

மூலக்கதை