ஒத்துழைப்பு அளிக்க பிரதமர் கோரிக்கை நாடாளுமன்ற கூட்ட தொடர் இன்று துவக்கம்

தினகரன்  தினகரன்
ஒத்துழைப்பு அளிக்க பிரதமர் கோரிக்கை நாடாளுமன்ற கூட்ட தொடர் இன்று துவக்கம்

புதுடெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தை முன்னிட்டு நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. நாடாளுமன்றத்தின் குளிர்க்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இக்கூட்டத் தொடரை அமைதியான முறையில் நடத்திச் செல்வதற்காக நாடாளுமன்ற விவகாரத்துறை சார்பில், டெல்லியில் நேற்று அனைத்து கட்சிக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில், பிரதமர் மோடி பேசுகையில், ‘‘மக்கள் நலனுக்காக நாடாளுமன்றம் சுமூகமாக செயல்பட அரசும், எதிர்க்கட்சிகளும் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும். அனைத்து விஷயங்கள் பற்றியும் விவாதிக்க அரசு தயாராக  உள்ளது.முக்கிய மசோதாக்களை நிறைவேற்றவும், முக்கிய விஷயங்கள் பற்றி ஆலோசிக்கவும், இரு அவைகளும் இரவு வரை கூட செயல்பட முடியும்’’ என்றார். கூடுதல் செலவினங்களுக்கான துணை மானிய கோரிக்கைகளை மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ளது. கூட்டத்துக்கு பின்னர் மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர் குலாம்நபி ஆசாத் அளி த்த பேட்டியில், ‘‘ரபேல் விவகாரம், சிபிஐ, அமலாக்கப்பிரிவு போன்ற விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்துவது குறித்தும், ரிசர்வ் வங்கி தன்னாட்சியுடன் செயல்படுவது குறித்தும் இந்த கூட்டத் தொடரில் வலியுறுத்துவோம்’’ என்றார்.

மூலக்கதை